பிரசவ வலி தந்த குழந்தை சங்கத்தமிழன் விரைவில் வந்துவிடுவான்

Recommended Video

Sunu Lakshmi Exclusive Interview

சென்னை: வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்களை அடுத்து இயக்குனர் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் தான் சங்கத்தமிழன் .இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன்முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்,ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சங்கமித்ரன் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் தமிழரசன் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை விஜயா புரடக்ஸன் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார் . படத்தில் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா ,நிவேதா பேதுராஜ்,நாஸர் ,சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்க்கு விவேக் மற்றும் மெர்வீன் இசையமைத்து வருகின்றனர் .படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ் செய்துள்ளார்.

sangathamilan movie release date postponed

இந்த படம் முதலில் தீபாவளி அன்று வெளியாக இருந்தது ,அந்த சமயம் பிகில் மற்றும் கைதி முந்திகொண்டதால் சங்கத்தமிழன் படத்திற்கு சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை ,இதனால் படம் தள்ளிபோய் நவம்பர் 15 ரிலீஸாகும் என அறிவிக்கபட்டிருந்தது.

தற்போது படம் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸாகாது தள்ளி போகும் என்ற விஷயங்கள் பரவின, ஏனெனில் சேதுபதி நடித்த சீதக்காதி,சூப்பர் டீலக்ஸ் ,சிந்துபாத் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் சரிவை சந்தித்த படங்கள். இது விஜய் சேதுபதியின் அடுத்த படமான சங்கத்தமிழன் படத்தை பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் .இதையடுத்து பிரபல தனியார் ஊடகம் ஒன்றின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சங்கத்தமிழன் படம் திருநெல்வேலி மாவட்டத்தில் ரிலீஸாகாது ,அங்கு பிரச்சனை உள்ளது என்று கூறப்பட்டது .

sangathamilan movie release date postponed

இதையடுத்து படத்தின் வினியோகிஸ்த நிறுவனமான 'லிப்ரா புரொடக்ஷன்' நிறுவனம் இதற்கு பதிலளித்துள்ளது .அதில் அந்த ஊடகத்தின் செய்தியை குறிபிட்டு இதை போல் உள்ள வதந்திகளை நம்ப வேண்டாம் கண்டிப்பாக படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது .இப்போது கண்டிப்பாக சங்கத்தமிழன் படம் ரிலீஸாவது உறுதியாகி உள்ளது . ஆனால் எப்போ ரீலீஸ் எத்தனை சென்டர் , என்று பல பல கேள்விகளுடன் நிற்கிறது .

sangathamilan movie release date postponed

சங்கத்தமிழன் சங்கத்தில் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று எதிர் பார்க்க வில்லை.
சங்கத்தமிழன் சங்கத்தில் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று எதிர் பார்க்க வில்லை. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனாலும் தரமான படம் தந்தால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ராசிக்காரர்கள் . படத்தை கொண்டாடி மிக பெரிய வெற்றியாய் மாற்றிவிடுவார்கள். லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X