ஒரு வழியா ரிலீஸ் ஆயிட்டாப்டி 'சங்கத்தமிழன்'.. ரசிகர்கள் கொண்டாட்டம்! #SangathamizhanFromToday
Recommended Video
சென்னை: சங்கத் தமிழன் திரைப்படம் பல தடைகளை தாண்டி தமிழகம் முழுவதும் நேற்று இரவு ரிலீஸானது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சங்கத் தமிழன். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, நாசர், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தாமதம்
சங்கத் தமிழன் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது படப்பிடிப்பே முடியாமல் இருந்ததால் படம் வெளியாவது தாமதமானது.

மாலைக்குள்
அதனை தொடர்ந்து நேற்று வெளியாக இருந்த ‘சங்கத்தமிழன்' படத்திற்கும் தயாரிப்பாளர் மூலம் சிக்கல் வர, படம் வெளியாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. ஆனால் படத்தை நேற்று மாலைக்குள் ரிலீஸ் செய்துவிடுவேன் என அறிவித்திருந்தார் விநியோகஸ்தர் ரவீந்தர் சந்திரசேகரன்.

உலகம் முழுவதும்
அதன்படி தயாரிப்பு தரப்பு உட்பட படம் ரிலீஸ் ஆவது தொடர்பான பிரச்சனைகளை தீர்த்த அவர்,நேற்று இரவு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். தற்போது ‘சங்கத்தமிழன்' தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஹேஷ்டேக் ட்ரென்டிங்
இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #SangathamizhanFromToday என்ற ஹேஷ்டேக்கையும் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தலைவா.. என குறிப்பிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











