விஜய்யின் பிகிலுக்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் - அக்டோபர் 4ல் ரிலீஸ்

Recommended Video

Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

சென்னை: சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி சங்கத்தமிழன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிகில் படத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டது சங்கத்தமிழன்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று சன் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி உள்ளிட்ட முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Sangathamizhan movie release on October 4

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் சங்கத்தமிழன் படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6ஆவது படமாகும். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் நாசர், சூரி, ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு.கார்த்திக் வரிகளில் வெளியான கமலா மற்றும் பிரான்சிஸ் எழுதி ராக்ஸ்டார் அனிரூத் பாடிய சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் என இரண்டு பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி , இயக்குனர் விஜய்சந்தர், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், இசையமைப்பாளர்கள் விவேக் சிவா, மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ், சூரி, ஸ்ரீமன், ஜான் விஜய், அகல்யா வெங்கடேசன், பாடலாசிரியர் விவேகா, நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

சங்கத் தமிழன் படத்தின் ஒளிப்பதிவு பணியை ஆர்.வேல்ராஜும், சண்டைப் பயிற்சியை அனல் அரசுவும் மேற்கொள்கின்றனர். கலை இயக்குனராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நடன இயக்குநர்களாக ராஜு சுந்தரம் மற்றும் செரிஃப் சாண்டியும், மக்கள் தொடர்பாளராக ரியாஸ்.கே.அஹமதும் கவனித்துக்கொள்கின்றனர். முதலில் இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், அப்போது தளபதி விஜய்யின் பிகில் படம் வெளியாவதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி சங்கத்தமிழன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X