சங்கத்தமிழனுக்கு ஓபனிங் வசூல் எப்படியிருக்கு.. முதல் ரெண்டு நாள்ல எவ்ளோ வசூல்?

Recommended Video

SANGATHAMIZHAN MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

சென்னை: சங்கத் தமிழன் படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சங்கத் தமிழன் படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. மூன்றாவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அப்போதும் பணப்பிரச்சனையால் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு அன்று மாலை சங்கத்தமிழன் படம் ரிலீஸானது.

ரூ. 5 கோடிக்கு மேல்

ரூ. 5 கோடிக்கு மேல்

இந்நிலையில் சங்கத்தமிழன் படம் இரண்டு நாட்கள் முடிவில் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றிருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 கோடிகளுக்கு மேல் சங்கத்தமிழன் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையான வசூல்

உண்மையான வசூல்

இதன் மூலம் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் வாரநாட்களில்தான் படத்தின் உண்மையான வசூல் என்ன என்பது தெரியவரும்.

சரியும் கிராஃப்

சரியும் கிராஃப்

நடிகர் விஜய் சேதுபதிக்கு கடைசியாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் அவரது கிராஃப் சற்று சரிந்து வருகிறது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

சங்கத்தமிழன் படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றால்தான் அவர் தலை நமிர முடியும் என்று கோலிவுட்டில் பேச்சு நிலவி வருகிறது. ஆனால் சங்கத்தமிழன் படமும் கலவையான விமர்சனங்களைதான் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X