இது சங்கவியா... விஜய் கூட நம்ப மாட்டாரே... பெரிய அதிர்ச்சியா இருக்கே!
நடிகை சங்கவியின் சமீபத்திய போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது.
சென்னை: நடிகை சங்கவி மீனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், சங்கவியின் தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சங்கவி. ரசிகன், கோயமுத்தூர் மாப்பிள்ளை என விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை மீனாவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை சங்கவி வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக காட்சி தருகிறார் சங்கவி. இது சங்கவியா என ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது அந்தப் புகைப்படங்கள்.
இந்தப் புகைப்படங்களில் அப்போது பார்த்தது போல், நடிகை மீனா அப்படியே தான் இருக்கிறார். ஆனால், சங்கவி தான் முகமெல்லாம் உப்பி, வித்தியாசமாக இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கவியைப் பார்த்த ரசிகர்கள், அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











