கையெழுத்துப் போட்ட சங்கீதா
இயக்குநர் செல்வா கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை சங்கீதா, மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் இன்று கையெழுத்துப் போட்டார்.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரம்பேட்டைச் சேர்ந்தவர் செல்வா. இயக்குநரான இவர் புதிதாக 2 படங்களை இயக்கி வந்தார். இந்த நிலையில் வடபழனியில் தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.அவரைக் கொன்றதாக, அவருடன் தங்கியிருந்த புதுமுக நடிகை சங்கீதாவைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் சங்கீதா விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரையில் மதுரையில் தங்கி தினசரி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
அதன்படி இன்று மதுரை வந்த சங்கீதா ஒத்தக்கடை காவல் நிலையம் சென்று கையெழுத்துப் போட்டார்.
Comments
actors actress இயக்குநர் செல்வா கொலை சங்கீதா தமிழ் செய்தி director director selva heroines sangeetha


Click it and Unblock the Notifications