சங்கீதா, ரெடின் கிங்ஸ்லி இது முதல் திருமணமா? பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன!
சென்னை: நடிகை சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல சுவாரசியமான தகவலை வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ரஜினியின் அண்ணாத்த, ஜெய்லர், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்: ரெடின் கிங்ஸ்லியின் சொந்த ஊர் தூத்துக்குடி எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடி என்பதால் எங்களுக்குள் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. பெங்களுரில் படித்த ரெடின் கிங்ஸ்லி சொந்தமாக பிஸ்னஸ் செய்ய ஆசைப்பட்டார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஷ்மீர் பனி லிங்கத்தை இப்படியே செட் போட்டுவைத்தார். அதற்கு கூட்டம் அள்ளியது.
க்ரூப் டான்சர்: ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், நடனம் கற்றுக்கொண்டார். இதையடுத்து, படத்தில் க்ரூப் டான்சராக இருந்தார். ஆனால், அவர் கொஞ்சம் குள்ளமாக இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து,நெல்சன் திலீப் குமார் படமான கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லின் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
நீண்ட நாள் காதலி: இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம், நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடந்தது. இந்த தகவலை கேள்வி பட்டு அவருக்கு போன் செய்து பேசினேன். ஆனால், போனை எடுத்த ரெடின், நாங்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம், அவரும் என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுக்கொண்டே இருந்ததால் திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னார்.
முதல் திருமணமா: அதே போல ரெடின் கிங்ஸ்லிக்கு 46வயசு ஆவதால், இது தான் முதல் திருமணமான என்று பேச்சு வருகிறது. சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இது முதல் திருமணம் தான். துணை நடிகையாக இருந்த சங்கீதா திருமகள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி சினிமாவில் ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலித்து வந்த நிலையில்,பல ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











