எத்தனை சூழ்ச்சி.. அண்ணி நீங்க இப்படி செய்யலாமா? விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் சீரியல் நடிகை இதுபற்றி வீடியோ வெளியிட்டு பேசி உள்ளார்.

சீரியல் நடிகை சசிலயா பேசி இருக்கும் வீடியோ, மக்களுக்கு நல்லது பண்ணும் எண்ணத்தோடு அரசியலுக்கு வந்த ஒரு மனுஷனை என்னவெல்லாம் பண்றீங்க, செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் துயர சம்பவம் நடந்தது, அக்டோபர் 27 ஆம் தேதி கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். நவம்பர் 27ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் தவேகவில் இணைந்தார், டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, ஜனவரி 27 ஆம் தேதி ஜனநாயகம் திரைப்படத்தின் வழக்கு நடந்தது, பிப்ரவரி 27ஆம் தேதி விவாகரத்து வழக்கு.

Vijay Sangeetha Dovorce
Photo Credit:

அண்ணி நீங்க இப்படி செய்யலாமா?: ஒரு மனிதனை அழிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் எந்த பக்கத்தில் இருந்தும் பிரச்சனைகளை கொடுப்பீங்களா? இந்த செய்தி உண்மையா? பொய்யா? இதைப்பற்றி எல்லாம் நான் பேசவில்லை. இது ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எதுவாக இருந்தாலும் அண்ணி நீங்கள் இதை செய்து இருக்கக்கூடாது, சுத்தி இருந்தவர்கள் அனைவரும் செய்த ஆயிரம் துரோகத்தை அண்ணன் பார்த்து இருக்கிறார். ஆனால், அண்ணனின் கூட எத்தனை வருடம் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள். சரியாக தேர்தல் நேரம் பார்த்து தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி பொது வெளியில் பேசுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

நாங்க இருக்கோம்: விஜய் அண்ணா, நீங்க எங்கள் அண்ணன், உங்களை அவ்வளவு சீக்கிரம் தோற்றுப்போக விடமாட்டோம். மற்றக்கட்சிகளுக்கு எத்தனை கட்சி வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம், தவெகவின் ஒரே அடையாளம் ஒரே நம்பிக்கை நீங்கள் தான். நீங்கள் உடைந்து போய் விடாதீர்கள் உங்களை நாங்க நம்புகிறோம் என நடிகை சசிலயா அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X