நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் விஜய்.. விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், அவருடன் சேர்ந்து வாழ முடியாது என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை சங்கீதா தற்போது தாக்கல் செய்யவில்லை, இதற்கு முன்பு கடந்த மாதமே சங்கீதா மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், சில பிழைகள் இருந்ததால், அதை திருத்தி, மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தான் சங்கீதாவின் வழக்கறிஞர் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Vijay Sangeetha divorce

சங்கீதா விவாகரத்து மனு: இதில், இரண்டு பேருமே பரஸ்பரமாக பேசி விவாகரத்து கோரவில்லை. சங்கீதா தான் நடிகர் விஜயிடம் இருந்தது தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்டுள்ளார். விவாகரத்து மனுவில், கடந்த 2009 ஆம் ஆண்டு எங்கள் இருவருக்குமே திருமணமானது. எங்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களது குடும்பம் வாழ்க்கையில் ஒரு நடிகை வந்ததால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அந்த நடிகை தான் காரணம்: இதனால், நான் மனரீதியாக பாதிக்கப்பட்டு என் சொந்த நாட்டுக்கு சென்று விட்டேன். அதன் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது என் கணவர், இனிமேல் நல்லபடியாக குடும்பத்தை நடத்துவதாக வாக்கு கொடுத்தார். இதனால், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். ஆனால், மீண்டும் 2021ஆம் ஆண்டு அந்த நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், மீண்டும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்த்து வருகிறோம். இந்த பிரச்சனையை இருவரும் சேர்ந்து முடித்துக்கொள்ள வேண்டும் என நான் செய்த அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இதற்கு மேல் அவருடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என, சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X