Vijay Son Sanjay - விஜய் மகனுக்காக லைகாவிடம் பேசி வாய்ப்பை பெற்றுத்தந்தது அவர்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: Vijay Son Sanjay (விஜய் மகன் சஞ்சய்) விஜய் மகன் சஞ்சய்க்கு லைகாவிடம் பேசி இயக்குநராகும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தவர் குறித்து சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் ஃபேமஸான நடிகராக இருப்பதால் சஞ்சய்யும் நடிகராக வலம் வருவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநராக வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதனையடுத்து கனடாவில் அவர் அதுதொடர்பாக படிக்கவும் செய்தார்.

குறும்படம்: படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய்; புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது. எனவே விரைவில் இயக்குநராக அறிமுகமாகி விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.
லைகாவுடன் கூட்டணி: இந்தச் சூழலில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். லைகா நிறுவனம் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும் பலரிடம் பலமாக எழுந்திருக்கிறது.
விஜய்க்கு தெரியாது?: இதற்கிடையே சஞ்சய் இயக்குநர் ஆகப்போகிறார் என்ற அறிவிப்பு வரும்வரை அவர் செய்த மூவ்கள் பற்றி விஜய்க்கு தெரியாது என்று ஒரு தகவல் ஓடியது. மேலும் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால் அவர் தனது மகன் மற்றும் மகளுடன் லண்டனுக்கு சென்றுவிட்டார். தமிழ்நாடு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.
சங்கீதா தான் காரணம்?: இந்நிலையில் சஞ்சய் இயக்குநராக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்துகளும் வந்தன விமர்சனங்களும் வந்தன. மேலும் பிரபலத்தின் மகன் என்பதால் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிட்டதாக ஒருதரப்பினர் கூறினர். இந்த சூழலில் அவர் இயக்குநராவதற்கு லைகாவிடம் பேசி வாய்ப்பை பெற்று தந்தவர் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தனது மகன் நடிகர் ஆகாமல் இயக்குநர் ஆக வேண்டுமென்பதே ஆசையாம். அதனையடுத்துதான் அவர் நேரடியாக லைகாவிடம் பேசி இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாக பத்திரிகையாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











