எனக்கு மகள் எல்லாம் இல்லை.. பல வருட சீக்ரெட்டை உடைத்த ரெடின் கிங்ஸ்லி மனைவி
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் பலரையும் கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் சங்கீதா முக்கியமான விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.
க்ரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி சில பாடல்களில் நடனம் ஆடியிருக்கிறார். பிறகு அவருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் கமிட்டானார் ரெடின். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

கோலமாவு கோகிலா: படம் பாதியில் நின்றதால் பிற தொழில்களை கவனித்துவந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதன்படி நடன பள்ளி ஆரம்பித்தது, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்தது என படுபிஸியாக இருந்தவருக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்தார்.
குவிந்த வாய்ப்புகள்: அந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடிக்க ஆரம்பித்தார். அவரது வித்தியாசமான உடல்மொழி, வாய் மொழி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இன்னும் அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.
திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். திடீரென கடந்த வருடம் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மைசூரில் வைத்து அந்தத் திருமணம் நடந்தது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்த கையோடு சங்கீதாவுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். விரைவில் அவர்களது ரிசப்ஷன் சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது திருமணம்?: இதற்கிடையே சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
சங்கீதா மறுப்பு: இந்நிலையில் சங்கீதா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதாக செய்திகளில் போட்டார்கள். அது என் சகோதரரின் மகள். ஆனாலும் எனது மகள் என்று சொல்கிறார்கள். சரி அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள் என்று அப்படியே விட்டுவிட்டேன். குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் செய்ய சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கஷ்டம்தான். ரெடினை பொறுத்தவரை அவர் விட்டுக்கொடுத்து போகும் குணம் கொண்டவர். நான் செய்யும் சிலவற்றை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால் பொறுத்துக்கொள்வார்.
இந்த வயதில் திருமணம் தேவையா என்று கேட்கிறார்கள். அவர்களால் அதை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது. நாங்கள் எங்களை இளமையுடன் வைத்திருக்கிறோம். பணத்துக்காக ரெடினை திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி செய்ய நான் ஒன்றும் இல்லாதவள் இல்லை. அவரின் அரவணைப்பு குணம்தான் என்னை ரொம்பவே கவர்ந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











