கணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா
Recommended Video

சென்னை: விஜய் சார்பில் அவர் மனைவி சங்கீதா திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என்று ஏராளமானோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

விஜய் சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் உள்ளதால் அவரால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் சார்பில் மனைவி சங்கீதா வந்து அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சர்கார் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துள்ளனர். சங்கீதா அஞ்சலி செலுத்தியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட பல கலைஞர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











