ஏப்ரல் 20 விசாரணை.. ஏப்ரல் 21ல் சங்கீதா செய்யப்போகும் அதிரடி செயல்?.. தேர்தலுக்கு முன் விஜய்க்கு சம்பவம்?
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா தாக்கல் செய்த மனுதான் கடந்த சில மாதங்களில் பெரிய பேசுபொருளான விஷயம். மனுவை தாண்டி அவர் தனது கணவர் மீது வைத்த சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுதான் பலருக்கும் பேரதிர்ச்சி. விஜய் இப்படிப்பட்டவரா ச்சீ என்ற எண்ணம் பலரது மனதில் தோன்றிவிட்டது என்பதுதான் எதார்த்தம். இந்நிலையில் சங்கீதா ஒரு அதிரடி செயலில் இறங்கப்போவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.
விஜய்யை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று, இருபது வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த சங்கீதா; திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறார். இதை பெரிய பிரச்னை ஆக்காமல் டீசன்ட்டாக பிரிந்துவிடலாம் என அவர் எடுத்த அத்தனை முயற்சிகளையும் விஜய் தட்டி கழித்ததாக கூறப்படுகிறது. இனிமேல் இது சரிப்பட்டு வராது என்று நீதிமன்றத்துக்கு சென்ற சங்கீதா; விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்தார். முக்கியமாக நடிகையுடன் அவர் தொடர்பில் இருக்கிறார் என்பதுதான் இந்த விஷயம் இன்னும் ட்ராவல் ஆவதற்கான எரிபொருளாக இருக்கிறது.

மறுக்காத விஜய்: தனது மனைவி இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததற்கு விஜய் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக திரிஷாவுடன் மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்து போஸ் கொடுத்தார். இரண்டு பேரும் அப்படி வந்தது இந்த விஷயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. சங்கீதா சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்குமோ என்ற எண்ணமும் அவரது ரசிகர்கள், ரசிகைகளிடமே தோன்றிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லாமல் தங்கள் தளபதியை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
விஜய் தொடர்ந்து செய்யும் தவறுகள்: விவாகரத்து விவகாரத்தில் விஜய் உச்சக்கட்ட ஈகோவில் இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். அவர் நினைத்திருந்தால் காதும் காதும் வைத்தபடி இப்பிரச்னையை முடித்திருக்கலாம். ஆனால் தனக்குள் ஈகோவால்தான் இவ்வளவு பெரிதாக மாற்றியிருக்கிறார். அதுவும் சங்கீதா முதல் மனு தாக்கல் செய்த பிறகு; வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாகவும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதை பார்த்து மேலும் ஒரு அதிர்ச்சி. இத்தனை வருடங்கள் உடன் இருந்தவரையே வீட்டுக்குள் விட மறுக்கிறாரே. இதெல்லாம் ரொம்ப பெரிய தவறாகவே பார்க்கப்படுகிறது.
யாருமே அப்படி இல்லை: அனைத்தையும் தாண்டி இந்தப் பிரச்னைக்கும் திமுகதான் காரணம் என அவர் சொன்னதெல்லம் அபத்தத்திலும் அபத்தமாகத்தான் பார்க்கப்படுகிறது. உலகத்தில் யாருமே தன்னுடைய விவகாரத்துக்கு மூன்றாவது மனிதர்கள் மீது பழியை போடமாட்டார்கள். அப்படி இருக்கையில் அவர் தொடர்ந்து இப்படி செய்வதை பார்த்த பலரும்; இதை வைத்து விஜய் அரசியல் செய்கிறார். மனுவில் இருக்கும் விஷயங்களை அவரே கூட வெளியில் விட்டிருக்கலாம் எனவும் அடித்து கூறுகிறார்கள்.
சங்கீதா பத்திரிகையாளர் சந்திப்பு: இந்த வழக்கானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராவாரா இல்லை வீடியோ காலில் ஆஜராவாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் சங்கீதா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 20ஆம் தேதி விசாரணையை முடித்துவிட்டு 21ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும்; அப்போது விஜய்க்கு எதிரான ஆதாரங்களை காட்டுவார் என்றும் பனையூருக்கும், நீலாங்கரைக்கும் நெருக்கமான வட்டாரம் சொல்கிறது. 23ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கும் முன்னதாக விஜய் பற்றி மேலும் ஒரு குண்டை தூக்கிப்போடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications















