Redin Kingsley Birthday - ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாள்..மனைவி சங்கீதா போட்ட எமோஷனல் போஸ்ட்..

சென்னை: Redin Kingsley Birthday (ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள்) நடிகர் ரெடின் கிங்ஸ்லி இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூழலில் அவரது மனைவியும் நடிகையுமான சங்கீதா எமோஷனலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

ரெடின் கிங்ஸ்லி இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். நெல்சன் முதன்முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதற்கு ரெடினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பானதால் மீண்டும் தனது நடன பள்ளி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் தொழில்களை கவனிக்க சென்றுவிட்டார் கிங்ஸ்லி.

Sangeetha Put Emotional Post About Redin Kingsley For His Birthday

கோலமாவு கோகிலா: பிறகு பல வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். நயன் தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதில் ரெடின் கிங்ஸ்லி நடித்து தன்னுடைய திறமையை காண்பித்து தனித்த அடையாளத்தை பெற்றார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

பிஸியான ரெடின் கிங்ஸ்லி: கோலமாவு கோகிலா மூலம் கிடைத்த வெளிச்சத்தை அடுத்து பல படங்களில் நடித்த அவர் தனது வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் மூலம் மேலும் பலரையும் கவர்ந்தார். இதன் காரணமாக வரிசையாக படங்களில் நடித்த அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அடுத்ததாக டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்திருக்கிறார்.

திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த சூழலில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்திருக்கிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு படப்பிடிப்பில் வைத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்ட அவர்கள் மாலத்தீவு, துபாய் நாடுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.

இரண்டாவது திருமணம்: ஹனிமூனை முடித்துவிட்டு அவர்கள் சென்னையில் பிரமாண்டமான முறையில் ரிசப்ஷனை வைக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதா கிரிஷ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றதாகவும்; அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ புகைப்படமோ விஷயமோ வெளியாகவில்லை.

பிறந்தநாள்: இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவுடன் ஒரு சிறுமி நிற்கும் புகைப்படம் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் அவர்தான் சங்கீதாவின் மகளா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி இன்று பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிகிறது. அதனையொட்டி சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெடின் கிங்ஸ்லியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மறக்கவே முடியாது: அந்தப் புகைப்படத்தோடு, "என்னுடைய மிகச்சிறந்த பாதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. இதுபோன்று இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துகிறேன். எனது அன்பு, அமைதி என அனைத்துக்குமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இதேபோன்ற அன்புடனும் இருவரும் வாழ வாழ்த்து சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X