அப்பா திடீர்னு இறந்துட்டாரு.. என் திருமணத்தை கூட பாக்கல.. கண்கலங்கிய ரெடின் கிங்ஸ்லி மனைவி!

சென்னை: நேற்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி நடிகை சங்கீதா தன் அப்பா குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் என் திருமணத்தை பார்க்காமல் இறந்து விட்டார் என்று கண்கலங்கி பேசி உள்ளார்.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமான இவர், அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது செம்ம பிசியான காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார். மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

Redin Kingsley Sangeetha interview

சங்கீதா ரெடின் கிங்ஸ்லி: நடிகை சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர். சங்கீதா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார் சங்கீதா.

விமர்சனம்: இவர்கள் இருவருக்கும் திருமணமான நாளில் இருந்தே, பணத்திற்காக தான் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த சங்கீதா, பணத்திற்காகவே நான் கிங்ஸ்லியை திருமணம் செய்ததாக கூறுகிறார்கள். என்னிடமும் பணம் இருக்கிறது. இதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் என்னால் விளக்கம் அளிக்க முடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்றார்.

சங்கீதா பேட்டி: இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சங்கீதா தனது அப்பா குறித்து பேசி உள்ளார். அப்பாவிற்கு அன்று மார்பு வலி இருந்து இருக்கு ஆனால், அவர் அதை வெளியில் சொல்லவில்லை. நானும் அம்மாவும் வெளியில் கிளம்பியதால், தண்ணீர் பாட்டில், பேக்கை கையில் எடுத்துக்கொடுத்து, டாடா காட்டி அனுப்பி வைத்தார். நாங்களும் கிளப்பி சென்றுவிட்டோம். ஆனால், புது கார் ஏதோ பிரச்சனை செய்ததால், இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து வேறு ஒரு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டோம். நாங்கள் வெளியில் போகாமல் இருக்க இப்படி எல்லாம் நடந்தது. ஆனால் நாங்கள் சென்ற பிறகு தான், அப்பாவிற்கு வலி அதிகமாகி, நாங்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

திடீர் மரணம்: என் அம்மா, அப்பா இருவருமே ரொம்ப அழகான தம்பதிகள் அவர்களின் காதலை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அப்பா இல்லாதது அம்மாவிற்கு மிகப்பெரிய இழப்பு, அவரை மாதிரி யாரும் அம்மாவை பார்த்துக்கொள்ள முடியாது. அம்மாவிற்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. அப்பாவின் இடத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த இடத்தை என்னால் சரி செய்ய முடிவில்லை. என்னுடைய வளர்ச்சி மற்றும் கல்யாணத்தை பார்க்க அப்பா இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. திடீர் என்று இப்படி விட்டு போய்விடுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று சங்கீதா கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X