எனக்கு பிடித்த விஜய் படம் அதுதான் சார்.. பேரரசுவிடம் ஓபனாக சொன்ன சங்கீதா

சென்னை: விஜய்யும், சங்கீதாவும் விரைவில் சட்டப்பூர்வமாக பிரியவிருக்கிறார்கள். ஜூன் 15ஆம் தேதி அவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு வரவிருக்கிறது. பிரிவுக்கு பிறகு மகன் சஞ்சய்யும், மகள் சாஷாவும் சங்கீதாவுடன் இருப்பார்கள் என்றே தெரிகிறது. எப்படியாவது மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்துவிடமாட்டார்களா என்ற ஏக்கமும் ரசிகர்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இயக்குநர் பேரரசு கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும்; அவருக்கும் இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என குற்றச்சாட்டு வைத்திருந்தார். அவரது இந்த செயல் அனைவரையும் உச்சக்கட்ட அதிர்சிக்கு உள்ளாக்கியது. படத்தில், மேடையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசும் விஜய்; தன் வீட்டுக்குள் மனைவியிடம் இவ்வளவு மோசமாக நடந்திருக்கிறாரே என்று சரமாரியாக விமர்சனங்கள் எழுந்தன. போதாக்குறைக்கு திரிஷாவுடன் ஒன்றாக வந்தது, சங்கீதா பிரச்னை அவ்வளவு வொர்த் இல்லை என்று கூறியதெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்பின.

Sangeetha s Favorite Vijay Film Revealed Amid Ongoing Personal Controversy
Photo Credit:

அடுத்த மாதம் விசாரணை: கடந்த மாதம் 20ஆம் தேதி இவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு பேருமே ஆஜராகவில்லை என தெரிகிறது. தேர்தல் பரப்புரை இருப்பதன் காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. எனவே வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று விஜய் தரப்பும் கோரிக்கையும் வைத்திருக்கிறது. அன்றைய நாள் ஜீவனாம்ச தொகையையும் கொடுக்க ஒத்துக்கொண்டு விஜய் பிரிவார் என்று தெரிகிறது.

தேர்தல் முடிவுகள்: இது ஒருபக்கம் இருக்க இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. பரப்புரையின்போது தவெகவினர் சென்ற சில இடங்களில், 'உங்கள் அண்ணனால் வீட்டில் இருக்கும் மனைவியையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவர் எப்படி எங்களை பார்த்துக்கொள்வார்' என்றுதான் கேட்டார்கள். ஆகமொத்தம் தமிழ்நாடு தேர்தல் களத்தில் விஜய்க்கான ஹைப் கொஞ்சம் பாசிட்டிவ்வாக ஏறியபோது சரியாக சங்கீதா விஷயம் வெளியாகி அதை கீழே இறங்க வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த விஷயங்கள் எல்லாம் தேர்தல் முடிவுகளில் தவெகவுக்கு நெகட்டிவ் விஷயங்களை கொடுத்துவிடுமோ என்ற அச்சத்திலும் அக்கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

பேரரசு பேட்டி: இந்நிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை இயக்கிய பேரரசு சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "விஜய்யை திருப்பாச்சி, சிவகாசி என நான் இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாகிவிட்டன. அந்தப் படங்களுக்கு பிறகு ஒருமுறை விஜய் சார் வீட்டுக்கு போனேன். அப்போது சங்கீதா மேடம் அங்கே இருந்தார். அவர் என்னிடம், 'நீங்கள் அவரை (விஜய்) வைத்து இரண்டு படங்களை இயக்கினீர்கள். அவற்றில் ரொம்பவே எனக்கு பிடித்த படம் என்றால் சிவகாசிதான்' என கூறினார்" என்றார்.

இரண்டுமே மெகா ஹிட்டுகள்தான்: அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டுகள் என்பது நினைவுகூரத்தக்கது. அதுவும் கில்லி படத்தின் வெற்றிக்கு பிறகுதான் விஜய்யும், திரிஷாவும் சக்சஸ்ஃபுல் ஜோடியாக மாறினார்கள். அதற்கு பின்பு அதே லக்கி ஜோடியை திருப்பாச்சியில் நடிக்க வைத்தார் பேரரசு. இதிலும் கில்லி போன்றே இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X