புது ரூட்டை பிடிக்கும் சங்கீதாவின் கணவர் க்ரிஷ்!
சென்னை : தமிழ் சினிமாவின் பாடல்களில் தனித்துத் தெரியும் ஒரு குரல் பாடகர் க்ரிஷ் குரல். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். தனது குரல் வளத்தால் நிறைய பட வாய்ப்புகளைப் பெற்ற க்ரிஷ் புது அவதாரத்திற்குத் தயாராகி வருகிறார்.
'மஞ்சள் வெயில் மாலையிலே', 'ஜூன் போனால் ஜூலை காற்றே' எனத் தொடங்கி 'ஒரு சின்னத்தாமரை', 'வாடா பின்லேடா', 'அண்டார்டிகா வெண்பனியிலே' எனப் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் க்ரிஷ்.

அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் உள்ள பாடல்கள் இவரின் குரலில் தான் ஹிட்டடித்தன. ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பிரபல இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் க்ரிஷ்.
இவர் சமீபத்தில் 'கோ', 'சிங்கம் 3', 'முப்பரிமாணம்' எனச் சில படங்களில் நடித்தும் இருந்தார். இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக விஷாலின் அடுத்த படத்திற்கு இவர் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











