Vijay: நீலாங்கரை வீட்டில் தான் இருப்பேன்.. விஜய்க்கு உத்தரவு போடுங்க.. நீதிமன்ற கதவுகளை தட்டிய சங்கீதா

சென்னை: நடிகர் விஜய் உடனான தனது திருமண பதிவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தான் தனது புகுந்த வீடான நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் எனவும், வழக்கு முடிந்து வேறு வீட்டிற்குச் செல்லும் வரை தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமறத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Sangeetha Seeks Court Permission to Stay in Neelankarai House Until Divorce Case With Vijay is Resolved

மேலும் அவரது புதிய மனுவில், “ பிரிட்டன் குடியுரிமையுடன் நான் லண்டனில் வசித்து வருவதால், எனக்கு சென்னையில் மட்டுமல்லாமால் இந்தியாவிலேயே தனியாக வீடு எதுவும் இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடு இன்றி தவிக்கிறேன். மேலும் என்னை வீட்டிற்குள் அனுமதிக்க நடிகர் விஜய் மறுக்கிறார். அதேபோல் கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் சேரவேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டும் விஜய்: நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவரது வழக்கறிஞர்கள் மூலம் தன்னை மிரட்டுகிறார். திருமணத்திற்கு பிறகு கடந்த 26 ஆண்டுகளாக ஒரு மனைவியக அவருக்கு எல்லாம் செய்துள்ளேன். குழந்தைகளை பெற்று கொடுத்துள்ளேன். அந்த குழந்தைகளை நன்றாக வளர்த்து ஒரு நல்ல இல்லறத்தை கட்டி எழுப்பி உள்ளேன். ஒரு மனைவியாக அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்துள்ளேன். நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமம் உள்ளது. அப்படி இருக்கையில் நான் நீலாங்கரை வீட்டில் தான் வசிக்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை நான் நீலாங்கரை வீட்டில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவரது புதிய மனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள் சந்தேகம்: நீலாங்கரை வீட்டில் தான் தங்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைப்பதும், விஜய் அனுமதிக்க மறுப்பதையும் கேள்விப்பட்ட இணையவாசிகள், சங்கீதா தனது விவாகரத்து மனுவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நடிகை, நீலாங்கரை வீட்டில் இருக்கிறாரா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X