Sangeetha - அதற்காக காத்திருக்கிறேன்.. ரெடினுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சங்கீதா மகிழ்ச்சி

சென்னை: Redin Kingsley (ரெடின் கிங்ஸ்லி) ரெடின் கிங்ஸ்லியுடன் இருக்கும் புகைப்படத்தை சங்கீதா பகிர்ந்திருக்கும் சூழலில் அது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

க்ரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி சில பாடல்களில் நடனம் ஆடியிருக்கிறார். பிறகு அவருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் கமிட்டானார் ரெடின். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

Sangeetha shared a picture with Redin Kingsley which is currently trending on the internet

கோலமாவு கோகிலா: படம் பாதியில் நின்றதால் பிற தொழில்களை கவனித்துவந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதன்படி நடன பள்ளி ஆரம்பித்தது, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்தது என படுபிஸியாக இருந்தவருக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்தார்.

குவிந்த வாய்ப்புகள்: அந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடிக்க ஆரம்பித்தார். அவரது வித்தியாசமான உடல்மொழி, வாய் மொழி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இன்னும் அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றனர்.

திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். திடீரென சில நாட்களுக்கு முன்பு சன்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மைசூரில் வைத்து அந்தத் திருமணம் நடந்தது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்த கையோடு சங்கீதாவுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். விரைவில் அவர்களது ரிசப்ஷன் சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது திருமணம்?: இதற்கிடையே சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

காத்திருக்கும் சங்கீதா: மேலும் நேற்று ஒரு புகைப்படம் இணையத்தில் திடீரென ட்ரெண்டானது. அதில் ரெடின் மற்றும் சங்கீதாவுடன் ஒரு சிறுமி இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் சங்கீதாவின் மகளா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெடின் கிங்ஸ்லியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என் ஆன்மாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X