கல்யாணத்துக்கு முன்பே அதை நான் சொல்லிவிட்டேன்.. ரெடின் கிங்ஸ்லி மனைவி ஓபன் டாக்
சென்னை; தமிழ் சினிமாவில் தற்போது ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் பலரையும் கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
க்ரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி சில பாடல்களில் நடனம் ஆடியிருக்கிறார். பிறகு அவருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் கமிட்டானார் ரெடின். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

கோலமாவு கோகிலா: படம் பாதியில் நின்றதால் பிற தொழில்களை கவனித்துவந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதன்படி நடன பள்ளி ஆரம்பித்தது, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்தது என படுபிஸியாக இருந்தவருக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்தார்.
குவிந்த வாய்ப்புகள்: அந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடிக்க ஆரம்பித்தார். அவரது வித்தியாசமான உடல்மொழி, வாய் மொழி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இன்னும் அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றனர்.
திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். திடீரென கடந்த வருடம் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மைசூரில் வைத்து அந்தத் திருமணம் நடந்தது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்த கையோடு சங்கீதாவுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். பிறகு திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இருவரும் இப்போது தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திவருகின்றனர்.
சங்கீதா பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய சங்கீதா, "எங்களது திருமணத்துக்கு முன்பே நான் அவரிடம் (ரெடின் கிங்ஸ்லி) எனக்கு சமையல் தெரியாது. வீட்டை ஒழுங்காக நிர்வாகம் பண்ண தெரியாது. ஜாலியா சேர்ந்து ஊர் சுத்தலாம் என்று கூறினேன். அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். அவரிடம் நான் எது கேட்டாலும் சரி என்றுதான் சொல்வார். ஃப்ரெண்ட்ஸோட வெளில போறேனு சொன்னாலும் சரி எதை கேட்டாலும் சரி ஓகே என்றுதான் சொல்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











