விஜய் மனைவி குமுறல்.. துரோகம், மனஉளைச்சலால் தவிந்தேன்.. அடுக்கடுக்கான புகார்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான் இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக அவர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், ஒரு நடிகை வந்ததால் எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நான் அவரை விட்டு பிரிந்து லண்டன் சென்றுவிட்டேன். பின் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன். ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியாகத்தான் வாழ்த்தோம். பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அந்த நடிகையுடன் உறவில் இருந்தார்.

மன அழுத்தம்: நடிகை உடனான உறவை முறித்துக் கொள்ளும்படி பல நேரங்களில் நான் அவரிடம் பேசினேன். முறித்துக் கொள்கிறேன் என சொன்னவர் மீண்டும் மீண்டும் அதே நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டு, மனக்கசப்பும் ஏற்பட்டது. இதனால், எங்களின் குடும்ப வாழ்க்கை சிதைய ஆரம்பித்தது உளவியல் ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.
நடிகையின் பெயரை சொல்லவா: என்னுடைய விருப்பு, வெறுப்புகளை அவர் கவனத்தில் கொள்ளாமல், தொடர்ச்சியாக என்னுடைய எதிர்ப்பையும் மீறி, பொது இடத்திற்கு என்னை அழைத்து செல்வதை தவிர்த்துவிட்டு, அந்த நடிகையுடன் தொடர்ந்து உறவில் இருந்தார். அனைத்து தரப்பின் மதிப்பை காக்கும் வகையில், அந்த நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை உடனான தொடர்பு குறித்து ஆவணங்களை வழங்குவதோடு, எதிர்மனுதாரராகவும் சேர்ப்பேன்.
அடுக்கடுக்கான புகார்: மகன் மற்றும் மகளின் நலன் கருதி இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். ஆனால், இதற்கு மேல் அவருடன் வாழ முடியாது. அந்த அளவு நான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய துன்பத்தை நான் அனுபவித்து வருகிறேன். இதை இருவருமாக பேசி கருத்து வேறுபாடுடன் பிரிந்து சென்றுவிடலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கும் வழியில்லாமல் போனதால், இந்த திருமணத்தை சட்டரீதியாக முறித்து வையுங்கள் என, சங்கீதா விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications