ஜீவனாம்சம் கேட்கும் சங்கீதா.. கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்.. பற்றி எரியும் விவாகரத்து வழக்கு!
சென்னை: செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்து இருக்கும் சங்கீதா, நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், விவாகரத்து கோருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும், விஜய்யின் வருமானம், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் அந்தஸ்துக்கு ஏற்றவாறு ஜீவனாம்சம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா, 'பூவே உனக்காக' படம் வெற்றி பெற்றதை அடுத்து, சென்னை வந்த சங்கீதா, படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகமானார். இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காலை பெற்றோரிடம் சொல்லி 1999 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என ஒரு மகன், மகள் உள்ளனர்.

விஜய்யின் மனைவி சங்கீதா: விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, சங்கீதா, விஜய் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. அதே போல மகன் சஞ்சய், இயக்குநராகிறார் என்ற அறிவிப்பு வெளியான போதும், விஜய் எந்தவிதமான வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து கொண்டு இருந்த சங்கீதா, விஜய் விவகாரம் இன்று ஒட்டுமொத்த மீடியாவிற்கும் தீணிபோட்டுள்ளது. இன்று சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தொடர்பில் இருந்தார்: அதில், விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்தார். அந்த தொடர்பை முறித்துக் கொள்ளும்படி பல முறை எடுத்துசொல்லியும், அவர் என்னை ஏமாற்றிவிட்டு அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தார். இதனால், மனதளவிலும், உடலளவிலும் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். இதற்கு மேல் என்னால் சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து வழங்கும்படி அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சங்கீதா, விஜய்யின் வருமானம், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் அந்தஸ்துக்கு ஏற்றவாறு நியாயமான, நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த பரபரப்பான செய்தியால் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications