கடைசி வரைக்கும் அந்த கையை விடல.. சிவகார்த்திகேயன் மனைவியிடம் சிலாகித்து பேசிய சங்கீதா விஜய்!

சென்னை: இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு படத்திற்கு கூட சங்கீதா விஜய் தியேட்டருக்கு சென்று பார்த்தது போல எந்த காட்சிகளும் வெளிவராத நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை விரும்பி பார்க்க தியேட்டருக்கு சங்கீதா விஜய் வந்தது காலையில் இருந்தே டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் வெளிநாட்டில் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

Sangeetha Vijay and Sivakarthikeyans wife Aarthi meets at theater

திடீரென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்க்க அவர் தியேட்டருக்கு வந்த நிலையில், தியேட்டரில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உடன் அவர் அலவலாவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய சங்கீதா விஜய்: நடிகர் விஜய்க்கும் சங்கீதா விஜய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது என்றும் இருவரும் பிரியப் போவதாக சில வதந்திகள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பின. ஆனால், வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகர் விஜய்யே சோஷியல் மீடியா நெகட்டிவிட்டி குறித்து மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசியிருந்தார்.

Sangeetha Vijay and Sivakarthikeyans wife Aarthi meets at theater

மேலும், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா இருவரும் வெளிநாட்டில் பயின்று வரும் நிலையில், அவர்களை கூடவே இருந்து கவனித்து வருகிறார் சங்கீதா விஜய் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் சென்னை திரும்பி உள்ளார்.

மாவீரன் படம் பார்த்த சங்கீதா விஜய்: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தை சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் சங்கீதா விஜய் பார்த்துள்ளார்.

காரில் இருந்து இறங்கி தியேட்டருக்கு மாஸ்க் அணிந்து கொண்டு சங்கீதா விஜய் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

Sangeetha Vijay and Sivakarthikeyans wife Aarthi meets at theater

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு: ஒரு பக்கம் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அடுத்த விஜய்யாக உருவெடுத்து விடக் கூடாது என அவருக்கு எதிரான போஸ்ட்டுகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டும் மாவீரன் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தும் வருகின்றனர்.

ஆனால், இன்னொரு பக்கம் விஜய்யை போலவே விஜய்யின் மனைவியும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவிக்க படத்தை தியேட்டருக்கே சென்று பார்த்துள்ளார்.

Sangeetha Vijay and Sivakarthikeyans wife Aarthi meets at theater

ஆர்த்தியுடன் சிலாகித்து பேச்சு: இந்நிலையில், மாவீரன் படத்தை தியேட்டரில் பார்த்த போது நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்த சங்கீதா விஜய் அவரது கையை பிடித்துக் கொண்டு ரொம்ப நேரம் சிலாகித்து படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் அவரது குடும்பத்தை விசாரித்தும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதற்கான வேலைகளை பார்க்க குழந்தைகளுடன் சென்னைக்குத் திரும்பி உள்ளாரா சங்கீதா விஜய் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X