விஜய் மீது சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கள்.. அரசியலில் வளரும் செல்வாக்கை அறுக்க பிளான்?.. பின்னணியில் யார்?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முழு மூச்சாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார் விஜய். இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்த விஷயத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் கூறிவருகிறார்கள்.

கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவான விஜய் தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அரசியலுக்கு வந்த அவர் தனது முதல் மாநாட்டிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நடந்த வேலூர் கூட்டம் வரை திமுகவை கடுமையாக அட்டாக் செய்துவருகிறார். அது திமுகவினரிடையே பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது. தங்களுடன் அவர் கூட்டணி வைப்பார் அல்லது தங்களை அனுசரித்து போவார் என்றுதான் அவரது அரசியல் பிரவேசத்தின்போது உடன்பிறப்புகள் நினைத்தார்கள். அப்படி நடக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். எனவே விஜய் மீது கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் வைத்துவந்தார்கள்.

சங்கீதா கேட்ட விவாகரத்து: சூழல் இப்படி இருக்க விஜய்யின் மனைவி இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், 'நானும், விஜய்யும் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம். அவருக்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை முறித்துக்கொள்ளும்படி எவ்வளவோ கேட்டும் அவர் செய்யவில்லை. இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.

Sangeetha Vijay Files Divorce Leaked Timing Fuels Political Speculations
Photo Credit:

நடிகையின் பெயரை சொல்வேன்: அந்த நடிகையும் விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்றார். அதுதொடர்பான புகைப்படங்களையும் பொதுவெளிகளில் ஷேர் செய்தார். அது எனது மகன், மகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை வெளியில் சொல்லவில்லை. அதேசமயம் எனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்; அந்த நடிகையை இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்" என்று பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

பெரும் பரபரப்பு: சங்கீதாவின் இந்த விவாகரத்து மனு பெரிய பரபரப்பை திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் பெர்சனல் வாழ்க்கையை இழுத்து விமர்சித்தவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது. சகட்டுமேனிக்கு சோஷியல் மீடியாவில் அவரை தாக்கி பதிவிட்டுவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்களுக்கு விஜய்யின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

பின்னணியில் யார்?: அதாவது விஜய்க்கு அரசியலில் படிப்படியாக செல்வாக்கு வளர்ந்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க விஜய்யை நினைத்து மாநிலத்தை ஆளும் திமுகவுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் பெரிய அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாகத்தான் இந்த விவகாரத்தை எடுத்து விஜய்யை அடித்து வருகிறார்கள். அதுவும் சங்கீதா தனது மனுவில், 'ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம்' என குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்கும்பட்சத்தில் இத்தனை வருடங்களில் அவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல்; சரியாக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்காக இதை செய்ய வேண்டும்.

இதன் பின்னணியில் திமுகவும், பாஜகவும்தான் இருக்கிறது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரில்தான் இது நடந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்புகூட முரசொலி செல்வம் மறைவுக்கு கோபாலபுரம் சென்றிருந்தார் சங்கீதா. விஜய்யை அரசியலில் நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள்; சங்கீதாவின் பின்னணியில் இருந்துகொண்டு இயங்குகிறார்கள். இந்த சதியை எல்லாம் எங்கள் தளபதி அசால்ட்டாக காலி செய்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

அதுமட்டுமின்றி பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "சங்கீதா முன்வைத்திருக்கும் அனைத்தும் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே. அது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இல்லை. ஆவணங்கள் கசிந்த நேரத்தையும்,வழியையும் கவனியுங்கள். எங்கு அடித்தால் விஜய்யை அதிகமாக பாதிக்குமோ அந்த இடத்தில் தாக்க முயற்சி செய்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X