Sangeetha Vijay: பாருடா.. சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க வந்த சங்கீதா விஜய்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் சென்னையிலே இல்லை வெளிநாட்டில் தனது குழந்தைகளை பார்த்து வருகிறார் என்றே தகவல்கள் வெளியான நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் அதுவும் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பார்க்க வந்த போது தென்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. கோலிவுட்டின் வருங்காலமாக மாறி உள்ள சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sangeetha Vijay visits theater to watch Sivakarthikeyans Maaveeran

தியேட்டர்களில் எல்லாம் பெரிய சைஸ் சிவகார்த்திகேயன் கட் அவுட்கள் வைக்கப்பட்டு தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

ஃபெயிலியரான பிரின்ஸ்: சினிமாவில் நடிகர்களுக்கு வெற்றித் தோல்வி எல்லாம் சகஜம் தான். தொடர்ந்து டாக்டர், டான் படங்கள் பெரியளவில் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்த நிலையில், கடந்த ஆண்டு தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படம் ஃபெயிலியர் படமாக மாறியது.

ஆனால், அந்த படம் ஹிட் படமென்று எல்லாம் சிவகார்த்திகேயன் முட்டுக் கொடுக்காமல் போன படம் மிஸ் ஆகிடுச்சு, இந்த முறை மாவீரன் மிஸ் ஆகாது என அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுகளை அதிகளவில் புக் செய்து இருந்த நிலையில், இன்று காலை முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாவீரனை பார்க்க வந்த சங்கீதா விஜய்: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் சில மாதங்களாகவே நடிகர் விஜய்யுடன் எந்தவொரு விழாவுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ வருவது இல்லை. தனது குழந்தைகளை வெளிநாட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில், நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சிக்கு கூட விஜய்யின் மனைவி சங்கீதா வரவில்லை. மேலும், பனையூரில் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் சந்திப்பின் போது கூட சங்கீதா விஜய்யை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்க்க காரில் இருந்து இறங்கி சங்கீதா விஜய் தியேட்டருக்குச் சென்ற காட்சிகள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

விஜய் ரசிகர்கள் குஷி: வெளிநாட்டில் இருந்து மீண்டும் சங்கீதா விஜய் சென்னை திரும்பி உள்ளார் என்றும் விரைவில் நடைபெற உள்ள விஜய்யின் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என பதிவிட்டு வருகின்றனர்.

வரும் அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வெளியாக உள்ளது. அதன் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X