சங்கீதாவின் மறைமுக மிரட்டல் தான் த்ரிஷாவுடன் விஜய் வர காரணமா?.. சைலன்ட்டா இருப்பதை பார்த்தால் டீலிங்?
சென்னை: திமுக - அதிமுக இடையேயான டீலிங் பற்றி தஞ்சாவூரில் விஜய் பேசும்போதே சங்கீதாவுக்கும் - விஜய்க்கும் இடையே 250 கோடிக்கு டீலிங் முடிந்து விட்டதாக ஊடங்கள் பேசத் தொடங்கி விட்டன. அந்த நடிகையின் பெயரை சொல்ல நேரிடும் என மறைமுகமாக சங்கீதா எச்சரித்தது தான் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் டிரெஸ்ஸில் வரக்காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் ரீமேக் படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் அரசியலிலும் எம்ஜிஆர் போலவே அரசியல் செய்யப் போவதாக அங்கேயும் ரீமேக் அரசியலை ஆரம்பித்து விட்டார் என்றும் நல்ல நல்ல கருத்துக்களை கூறிய கட்சித் தலைவர்களை எல்லாம் கொள்கை தலைவர்கள் என அறிவித்துக் கொண்டு மக்களுக்காக போராட போவதாக களத்தில் குதித்தார்.

விஜய்க்கு எதிரான அரசியல் அட்டாக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மறைமுகமாக வீட்டில் நடந்துக் கொண்டிருந்த விவாகரத்து பஞ்சாயத்தை கசியவிட்ட நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் த்ரிஷாவுடன் திருமணத்துக்கு வந்துள்ளார் என தவெகவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
த்ரிஷாவுக்கு கெட்டப்பெயர்: தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை த்ரிஷா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, விஜய், அஜித், சிம்பு என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். டோலிவுட், பாலிவுட் மற்றும் மலையாள படத்திலும் அவர் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த த்ரிஷா விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததில் இருந்தே த்ரிஷாவுக்கு கெட்டப்பெயர் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்கின்றனர். மேலும், சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையே சண்டை வரக் காரணமும் அந்த காட்சி தான் என்றும் தொடர்ந்து விஜய்யை சந்தேகிக்க ஆரம்பித்த நிலையில் தான் விஜய் த்ரிஷாவுடன் நெருங்கி பழகவே ஆரம்பித்தார் என்றும் கம்பி கட்டுகின்றனர்.

சங்கீதாவின் மறைமுக எச்சரிக்கை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் போல பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து அவரவர் வழிக்கு செல்கிறோம் என அறிவிக்காமல் விஜய்க்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்த சங்கீதா அதில் விஜய்க்கு இருக்கும் பிரச்னைகள், தன்னை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டது, அதிக அளவு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டது, நடிகையுடனான கள்ள உறவு எனக் குறிப்பிட்டது மற்றும் அந்த தகவலை தேர்தல் நேரத்தில் கசியவிட்டது தான் தற்போது விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக வெளியே வரக் காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர்.
ஷாக்கை குறை: த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் என்னமோ நேற்று தான் ஒன்றாக வெளியே வருவது போல துடிக்காதீங்க ரசிகர்களே என்றும் அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது ஒரே அபார்ட்மெண்டில் குடியிருப்பது, கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு இதே போல ஜோடியாக சென்றது என தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கின்றனர் என்றும் த்ரிஷா பற்றிய அவதூறுகளை களையவே தற்போது விஜய் அதை பகிரங்கமாக செய்யத் தொடங்கி விட்டாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக விஜய் மற்றும் த்ரிஷா இதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











