Sangeetha Vijay: யாரும் இதை பற்றி பேச கூடாது.. சங்கீதாவின் முக்கியமான பாயிண்ட்!

சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடுத்துள்ளார். செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் சங்கீதா தனது தரப்பு வழக்கறிஞர் மஞ்சுளா மூலம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து மனுவில்,1999 ஆம் ஆண்டு தனக்கும் விஜய்க்கும் திருமணம் நடைபெற்றதாகவும், தங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. எங்களுக்கு சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகை ஒருவர் எங்களது வாழ்க்கையில் குறுக்கே வந்த பிறகுதான் எங்களது குடும்ப வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால், நான் கணவரை விட்டு பிரிந்து லண்டன் சென்றுவிட்டேன்.

Vijay Sangeetha

சங்கீதா விவாகரத்து மனு: சமரசத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த போதும் தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தோம். ஆனால், அதன் பிறகும் எனது கணவர் விஜய் நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்ளாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆஜர்: இந்த மனுவை சங்கீதா பிப்ரவரி 24ந் தேதி செங்கல்பட்டு முதன்மை நீதிபதி திரு சந்திரசேகர் முன்பு சாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி மனுவை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான பாயிண்ட்: மேலும் விவாகரத்து தொடர்பான செய்திகளை, தொலைக்காட்சி செய்திகள், தினசரி நாளிதழ்கள், இணையதளங்களில் செய்தி வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரரான விஜய்யின் மனைவி சங்கீதா அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X