Vijay - மனைவியின் ஆசைக்காக விஜய் நடித்த படம் எது தெரியுமா?.. அவ்வளவு பிரச்னையை பார்த்த படம்
சென்னை: Vijay (விஜய்) தன் மனைவியின் ஆசைக்காக விஜய் ஒரு படத்தில் நடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
தமிழின் டாப் 3 நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் லியோ படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

விஜய் 68: லியோ படத்துக்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக அவருக்கு 175 கோடி ரூபாயிலிருந்து சம்பள பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
அரசியல் ஆசை: விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என பலர் கூறிவருகின்றனர். சமீபத்திய அவரது நடவடிக்கையும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக எழ ஆரம்பித்திருக்கிறது. அண்மையில்கூட மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்க தொகை கொடுத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இரவு நேர பாடசாலை: அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விஜய் தனது அரசியலுக்கான விதையை விதைக்க ஆரம்பித்துவிட்டார் என அவரது ரசிகர்களும் முழுமூச்சாக வேலை செய்துவருகின்றனர். இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதுதான் விஜய் நடிக்கும் கடைசி படம். அதனையடுத்து மூன்று வருடங்கள் பிரேக் எடுத்து அரசியல் வருகைக்கான பணிகளை கவனிப்பார் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது வதந்தி என உறுதியானது.

மனைவியின் ஆசை: இந்த சூழலில் தனது மனைவி சங்கீதாவின் ஆசைக்காக விஜய் ஒரு படத்தில் நடித்தது தெரியவந்திருக்கிறது. அதாவது சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்பவே பிடிக்குமாம். எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை தனது ஆசையை விஜய்யிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தாராம் சங்கீதா.
அதனையடுத்துதான் ஏ.எல்.விஜய்யை அழைத்து ஏதாவது கதை இருக்கிறதா என விஜய் கேட்க அவர் தலைவா கதையை சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தளபதி மனைவி மேல எவ்வளவு காதலோடு இருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











