இவங்க கதையும் சினிமாவாகுது... உறுதிப்படுத்திய டென்னிஸ் வீராங்கனை... யார் நடிக்கிறாங்க?
சென்னை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை சினிவாகிறது. இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பயோபிக் டிரெண்டாகி இருக்கிறது, இப்போது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாஅக் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள்.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாகின. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

சாய்னா நேவால்
இப்போது, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதேபோல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிக்கிறார்.

சானியா மிர்சா
இந்த வரிசையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை கதையும் படமாகிறது. இந்தப் படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இதை சானியா மிர்சா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, என் கதை படமாக இருப்பது உண்மைதான். படத்துக்காக கதாசிரியர்களுடன் நானும் உட்கார இருக்கிறேன்.

கிளாமர் மட்டுமே
பலருக்கு விளையாட்டு வீரர்களின் வீராங்கனைகளின் நடவடிக்கைகள், அவர்களின் கடின உழைப்பு, பெற்றோர்களின் தியாகம் போன்றவை தெரிவதில்லை. அவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் நானும் படத்தின் உருவாக்கத்தில் இணைந்திருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பயோபிக் வரிசை
படத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள், யார் இயக்கப் போகிறார் என்கிற எதுவும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சானியா, யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து படக்குழு முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இதையடுத்து விளையாடு வீரர், வீராங்கனைகளின் பயோபிக் வரிசையில் சானியா மிர்சாவும் இணைந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











