காதலனாக நடிக்க ஆசை தெரிவித்த ஷாருக்கான்.. நச் பதில் கொடுத்த சானியா மிர்சா

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஷாருக்கான் குறித்து சானியா மிர்சா பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

Shah Rukh Khan Sania Mirza

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

டன்கி: இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

சானியா மிர்சா பதில்: இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கிரேட் கஃபி ஷோ என்ற நிகழ்ச்சி வாரா வாரம் நடக்கிறது. இதனை கபில் ஷர்மா தொகுத்து வழங்குகிறார். சூழல் இப்படி இருக்க இந்த வாரத்திற்கான சிறப்பு விருந்தினராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலந்துகொண்டார். அவரிடம், 'சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அதில் சானியாவின் காதலனாக நடிக்க ஷாருக்கான் ஆசை என்று தெரிவித்திருக்கிறாரே' என கபில் கேள்வியை முன்வைத்தார்.

காதலை தேடி பிடிக்க வேண்டுமே பாஸ்: அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சானியா, 'அதற்கு நான் ஒரு காதலை முதலில் தேடி பிடிக்க வேண்டுமே' என்றார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது . சானியா மிர்சா ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டு பிறகு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X