குறும்படத்தில் இளம் புயல் சானியா மிர்ஸா... பலாத்கார விழிப்புணர்வுக்காக!
ஹைதராபாத்: பாலியல் பலாத்கார விழிப்புணர்வு தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை ஒரு குறும்படம் தயாரிக்கவுள்ளது. அதில் இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸாவை நடிக்க வைக்கவுள்ளனர்.
இளம் பெண்கள் மத்தியில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்களிடையே பாலியல் சில்மிஷங்கள், பலாத்காரம் உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படமாம் இது.
சமீபத்தி்ல 22 வயதாகும் ஒரு இளம் ஐடி பெண் ஊழியர் 2 டிரைவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த குறும்படத்தை தயாரிக்கிறது ஹைதராபாத் காவல்துறை.

ஐடி நிறுவனங்களுடன் இணைந்து
சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த குறும்படத்தை தயாரிக்கவுள்ளது ஹைதராபாத் காவல்துறை.

நடிகர் - நடிகையரும்
இந்தக் குறும்படத்தில் சானியா மிர்ஸா முக்கியப் பங்கு வகிக்கிறாராம். கூடவே சில தெலுங்கு நடிகர், நடிகையரும் தோன்றவுள்ளனர்.

எது செய்யலாம்.. எது கூடாது
தனியாக எங்காவது போகும்போது யாராவது அநாகரீகமாக அல்லது முறைகேடாக நடந்து கொண்டால் எப்படி சமாளிப்பது. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது. கற்புக்கு எப்படி உத்தரவாதத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் குறும்படத்தில் விளக்கவுள்ளனராம்.

பாதுகாப்பாக போவது எப்படி
பெண்கள் பொது இடங்களுக்குப் போகும்போது எப்படி பாதுகாப்பாக போய் வருவது என்பது குறித்தும் இதில் விளக்கப்படவுள்ளதாம்.

தியேட்டர்களில்.. ஐடி நிறுவனங்களில்.. டிவிகளில்
தியேட்டர்கள், ஐடி நிறுவனங்கள், தொலைக்காட்சிகளில் இந்தக் குறும்படத்தைக் காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சானியாவிடமிருந்து கருத்து இல்லை
இந்தக் குறும்படத்தில் சானியா நடிப்பது உறுதி என்ற போதிலும் இதுதொடர்பாக சானியா தரப்பில் எந்த வார்த்தையும் இல்லை.


Click it and Unblock the Notifications











