மாநகரம் ஸ்ரீயை மணந்தாரா சானியா ஐயப்பன்.. டிரெண்டாகும் திருமண புகைப்படம்.. உண்மை என்ன?
சென்னை: மலையாள திரையுலகின் இளம் நடிகை சானியா ஐயப்பன் மாநகரம் ஸ்ரீயை திருமணம் செய்துக் கொண்டது போன்ற புகைப்படத்தை சற்றுமுன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பால்ய கால சகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சானியா ஐயப்பன்.

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படம் வரை பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீயுடன் சானியா ஐயப்பன் மணக்கோலத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது எப்போ நடந்தது என ஸ்தம்பித்துப் போயுள்ளனர். ஆனால், இதில் ஒரு செம ட்விஸ்ட் காத்திருக்கு என்பது தான் ஹைலைட்.
மாநகரம் ஸ்ரீ: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமான ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்படி, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீக்கு அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஸ்ரீ 4வது நாளே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பசங்களோட கிரஷ் சானியா ஐயப்பன்: மலையாளத்தில் 2018ல் வெளியான குயின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சானியா ஐயப்பன். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், ஒரே சரக்கு போட்டோக்களையும் நீச்சல் உடை தரிசனத்தையும் தந்து இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வந்தார்.
இந்நிலையில், திடீரென பலருக்கும் ஹார்ட் அட்டாக் வரும் படியாக ஒரு திருமண போட்டோவை ஷேர் செய்து ஷாக் ஆக்கி உள்ளார்.

ஸ்ரீயை மணந்தாரா சானியா ஐயப்பன்?: நடிகர் ஸ்ரீயுடன் சானியா ஐயப்பன் மணக்கோலத்தில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை வெறுமனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய, ரசிகர்கள் பலரும் ஆடிப் போய்விட்டனர்.
தங்களுடைய லேட்டஸ்ட் கிரஷ் இவ்ளோ சீக்கிரமாக திருமணம் செய்துக் கொண்டாரா? அதுவும் நடிகர் ஸ்ரீயையா என புலம்பி வருகின்றனர். ஆனால், இது ஒரு புதிய படத்துக்கான ஸ்டில் என்பது தெரிய வந்த நிலையில், அவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இறுகப்பற்று படத்தின் ஸ்டில்: மாநகரம் படத்துக்கு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் ஸ்ரீ, நடிகை சானியா ஐயப்பனுடன் இணைந்து இறுகப்பற்று படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள திருமண காட்சி தான் அந்த ஸ்டில் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதே படத்தில் இருவரும் ஆபிஸ் லிப்டில் செல்லும் ஒரு புதிய ஸ்டில்லும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











