வரம்பு மீறிய ரசிகர்..ஓங்கி அறைந்த நடிகை..சர்ச்சைக்கு விளக்கம்!
கேரளா : நடிகை சானியா அய்யப்பன் ரசிகர் கன்னத்தில் பளாரன்று அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
2014ம் ஆண்டு பால்யகலாசகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகமானார் சானியா அய்யப்பன். பின்னர், சுரேஷ் கோபியின் மகளாக அபோதிகாரி என்ற படத்தில் நடித்து பெயர் எடுத்தார்.
2018ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படத்தில் சானியா முதல் முறையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி, தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சாட்டர்டே நைட்
நடிகை சானியா அய்யப்பன் நிவின் பாலி நடிப்பில் உருவாகி உள்ள சாட்டர்டே நைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் ஒன்றில் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முட்டிமோதிய கூட்டம்
கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏராளமனோர் மாலின் குவிந்தனர். இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து சக நடிகையுடன் சானியா அய்யப்பன் நடந்து வந்து கொண்டிருந்த போது, ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு அவர்களின் அருகில் வந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்.

ஓங்கி அறைந்தார்
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரை சானியா அய்யப்பன் ஓங்கி அறைந்தார் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி பலரும் சானியாவை கண்டபடி திட்டித்தீர்த்தனர். இதுகுறித்து நடிகை சானியா ஐயப்பன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், நானும் எனது சக படக்குழுவினரும், 'சேட்டர்டே நைட்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறோம்.

நடந்து கொண்டார்
கோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியேறும் போது, அங்கிருந்த நபர் என்னுடன் வந்த சக நடிகையிடம் தவறாக நடந்து கொண்டார்கள். இதனால் தான் அந்த நபரை அடித்தேன். இதுபோன்ற தேவையற்ற சம்பவங்களை யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் பெண்களுக்கு எதிரான வன்முறை இந்த பெண் வெறுப்பு நபர்களுக்கு எதிராக விளைவுகளும் நடவடிக்கைகளும் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











