twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மாதத்தில் 7 படங்களை இழந்த சுஷாந்த் சிங்.. ஒரு நடிகரை கொன்று விட்டார்கள்.. சஞ்சய் நிருபம் ஆவேசம்!

    |

    சென்னை: சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு திரைத்துறையின் இரக்கமற்ற தன்மையே என காரணம் முன்னாள் எம்பியான சஞ்சய் நிருபம் விளாசியிருக்கிறார்.

    Recommended Video

    Sushant Singh குடும்பத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு | Sister in law

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பீகாரை பூர்விகமாக கொண்ட சுஷாந்த் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு மருத்துவர். அண்ணன் ஒரு எம்எல்ஏ.

    சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

    தோனியின் பயோபிக்

    தோனியின் பயோபிக்

    தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார் சுஷாந்த் சிங். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுக்க பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

    தற்கொலைக்கு எதிராக

    தற்கொலைக்கு எதிராக

    கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ச்ஹிஹோரே என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். தற்போது அவர் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஓரங்கட்டிய பாலிவுட்

    ஓரங்கட்டிய பாலிவுட்

    திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஷாந்த் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகளை கொடுக்கமால் ஓரங்கட்டியதால்தான் அவரது மன அழுத்தம் அதிகரித்தது என்றும் கூறி வருகின்றனர்.

    புறக்கணிக்க வேண்டும்

    புறக்கணிக்க வேண்டும்

    மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான கரன் ஜோஹர், சல்மான் கான், ஆலியாபட் ஆகியோர் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்றும் அவர்கள்தான் சுஷாந்தை பாலிவுட்டில் பிளாக் செய்தார்கள் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாலிவுட்டில் சில நட்சத்திரங்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

    இரக்கமற்ற தன்மை

    இரக்கமற்ற தன்மை

    இந்நிலையில் முன்னாள் எம்பியும் பிரபல அரசியல் வாதியுமான சஞ்சய் நிருபம், சுஷாந்த் மரண விவகாரத்தில் பாலிவுட் திரைத்துறையை கடுமையாக சாடியுள்ளார். ச்ஹிஹோரே படத்திற்கு பிறகு 6 மாதங்களில் 7 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் சுஷாந்த் என்றும், திரைத்துறையின் இரக்கமற்ற தன்மை ஒரு நடிகரை கொன்றிருக்கிறது என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.

    English summary
    Sanjai Nirupam slams Bollywood cinema. He has twitted that Sushant Singh Rajput lost 7 films in 6 months, says 'film industry's ruthlessness killed the actor'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X