தமிழ், தெலுங்கு, இந்தியில் சாதனை வீராங்கனையின் பயோபிக்... இவர்தான் டைரக்ட் பண்ணப் போறாராம்!
சென்னை: பிரபல முன்னாள் வெயிட் லிப்ஃடிங் வீராங்கனையின் வாழ்க்கை கதையை பெண் இயக்குனர் இயக்க இருக்கிறார்.
பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது சினிமாவில் இப்போது அதிகரித்து வருகிறது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகளை சினிமாவாக எடுக்க தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

வரவேற்பைப் பெற்றன
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாவானது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்போது, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

மிதாலி ராஜ்
பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதையை, வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். அவர், பயிற்சியாளராகவும் நடிக்கிறார். பி.வி.சிந்துவாக யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. இதே போல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் பிரபல நடிகை டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சபாஷ் மித்து என்று டைட்டில் வைத்துள்ளனர்..

கர்ணம் மல்லேஸ்வரி
இந்நிலையில், பிரபல வெயிட்லிப்ஃடிங் வீராங்கனை, கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதையும் படமாகிறது. ஆந்திராவை சேர்ந்த மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண். கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் அதுதான்.

சரியான இயக்குனர்
பிரபல தெலுங்கு ஸ்கிரிப்ட் டைரட்டரும் தயாரிப்பாளருமான கோனா வெங்கட், இவரது வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதற்கான உரிமையை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் உருவாவதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த கதையை இயக்குவதற்கு சரியான இயக்குனரை தேடி வந்தார்.

சஞ்சனா ரெட்டி
தமிழ், தெலுங்கு, இந்தியில் இருந்து இயக்குனரை தேடுவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த கதையை சஞ்சனா ரெட்டி இயக்குவது உறுதியாகி உள்ளது. இவர், ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். மல்லேஸ்வரியாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை.


Click it and Unblock the Notifications











