துப்பட்டாவை கயிறாக்கி.. அவ்வளவு உயர தென்னை மரத்தில் அசால்ட்டாக ஏறிய பிரபல நடிகை.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: துப்பட்டாவை கயிறாக்கி காலில் கட்டிக்கொண்டு, பிரபல நடிகை ஒருவர் உயரமானத் தென்னை மரத்தில் ஏறி மிரள வைத்திருக்கிறார்.
தமிழில், ரேணிகுண்டா படம் மூலம் நடிகையானவர் சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்தவர்.
இதையடுத்து காதல் பாதை, ரகளைபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், மீகாமன் உள்பட சில படங்களில் நடித்தார்.

நடிகை சஞ்சனா சிங்
கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடும் நடிகைகளில் சஞ்சனா சிங்கும் ஒருவர். அவர் இப்போது வெளியிட்டுள்ள வீடியோ, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

துப்பட்டாவை கயிறாக்கி
உயரமானத் தென்னை மரத்தில் அவர் கேஷூவலாக ஜிவ்வென்று வேகமாக ஏறினால், ஆச்சரியமாக இருக்காதா என்ன? நடிகை சஞ்சனா சிங் தனது மானேஜர் வெங்கட்டுடன் சேலம் அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றுள்ளார். வெங்கட்டுக்குச் சொந்தமான தோப்புக்குச் சென்ற அவர், அங்கு தனது துப்பட்டாவைக் கயிறாக்கினார்.

உயரமான தென்னை
பின்னர் அதை காலில் கட்டிக்கொண்டு அங்கிருக்கும் உயரமான தென்னை மரத்தில் சரசரவென்று ஏறினார். மரத்தின் உச்சி வரை சென்ற அவர், அங்கிருந்து மூச்சிறைக்க சர்ரென்று இறங்கினார். இதை அவருடன் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சஞ்சனா சிங்.

சிறு வயது ஞாபகம்
அவர் கூறும்போது, 20 வருடத்துக்கு முன் தென்னை மரம் ஏறினேன். அதற்குப் பிறகு இப்போதுதான் ஏறி இருக்கிறேன். எனக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இதற்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சிங்கப்பெண் நீங்கதான்
ஒருவர், உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் என்று தெரிவித்துள்ளார். பலர் அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டியுள்ளனர். வேற லெவல் சஞ்சனா, இன்னும் உயரம் செல்ல வாழ்த்துக்கள் என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். 'பக்கத்துல த்ரீ பேஸ் லைன் இருக்குதே, கவனிக்கலையா? என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











