திடீர் மூச்சுத் திணறல்.. பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. நலமாக இருப்பதாக ட்வீட்!
மும்பை: பிரபல நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்களும் பீதியில் இருக்கின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழகத்தில் இது தீவிரமாக இருக்கிறது. இந்தப் பரவலைத் தடுக்க அரசுகள் போராடி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர்.

இயக்குனர் ராஜமவுலி
அபிஷேக் பச்சன் நேற்று வீடு திரும்பினார். நடிகர் விஷாலும் அவர் தந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி உள்ளார். இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை நானாவதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்குத் திரும்புவேன்
இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்நிலையில், 'நான் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறேன். எனக்கு கோவிட்-19 சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. மருத்துவர்களின் உதவியால் இன்னும் ஓரிரு நாளில் வீட்டுக்குத் திரும்புவேன். உங்கள் வாழ்த்துக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் சஞ்சய் தத்.


Click it and Unblock the Notifications











