என்னாச்சு? மருத்துவச் சிகிச்சைக்காக நடிப்புக்கு பிரேக்.. பிரபல நடிகரின் தகவலால் ரசிகர்கள் ஷாக்!

By

மும்பை: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரபல நடிகர், இப்போது சிகிச்சைக்காக நடிப்புக்கு பிரேக் என அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிச்சியில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதன் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் திரும்பினர்.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.

கண்காணிப்பில்

கண்காணிப்பில்

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்திருந்த நடிகர் சஞ்சய் தத், இருந்தும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவேன் என்றும் கூறியிருந்தார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து
தெரிவித்தனர்.

மருத்துவ சிகிச்சை

மருத்துவ சிகிச்சை

இந்நிலையில், இன்று அதிர்ச்சி தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், 'மருத்துவ சிகிச்சைக்காக நான் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பமும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். இதற்காகக் கவலைப்பட வேண்டாம், இதுபற்றி தேவையில்லாத செய்திகளை ஊகிக்கவும் வேண்டாம் என்று நலம் விரும்பிகளை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறியுள்ளார்.

விரைவில் குணமடைய

விரைவில் குணமடைய

இதையடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் பாதுகாப்பாக இருங்கள், உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். நடிகர் சஞ்சய் தத், தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில் அதீரா என்ற வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் சடக் 2, புஜ்: த பிரைட் ஆப் இந்தியா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X