சரணடைய மேலும் அவகாசம் வேண்டும் - உச்சநீதி மன்றத்தில் சஞ்சய் தத் மனு

By Shankar

Sanjay Dutt asks SC for more time to surrender
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்கவிருக்கும் நடிகர் சஞ்சய் தத், அந்த தண்டனைக்காக நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஏற்கனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில், மீதமுள்ள தண்டனைக் காலமான 3 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். இதற்காக தடா நீதிமன்றத்தில் அவர் சரண் அடையவும் உத்தரவிட்டது. ஆனால், சஞ்சய் தத்துக்கு கருணை காட்ட வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், நீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறை செல்வேன் என்றும், மேல்முறையீடு செய்யமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளில் உருவாகி வரும் பல்வேறு திரைப்பட சூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால், தனக்கு சிறை செல்வதற்கு கால அவகாசம் தேவை என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X