கே.ஜி.எப் 2-வில் நடிக்க கஷ்டமாக இருந்தது.. ஆனாலும் ரசித்து நடித்தேன்.. பிரபல இந்தி ஹீரோ மகிழ்ச்சி!

By

சென்னை: 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தில் நடித்தது கஷ்டமானதுதான் என்றாலும் ரசித்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்.

யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. இதை படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கார்த்திக் கவுடா தெரிவித்திருந்தார்.

அனுபவித்து நடித்தேன்

அனுபவித்து நடித்தேன்

இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளுக்கும் சேர்த்து, இந்த தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க கஷ்டமாக இருந்தது என்றும் ஆனாலும் அனுபவித்து நடித்தேன் என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

டிஜிட்டல் கதவுகள்

டிஜிட்டல் கதவுகள்

அவர் கூறும்போது, ' சினிமாவில் இப்போது அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டிஜிட்டல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நடிகர்களுக்கு இது சிறந்த நேரம். கே.ஜி.எப் சாப்டர் 2 படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாவதில் எனக்கு மகிழ்ச்சி. நடிகர்களுக்கு மொழியோ எல்லையோ ஒரு பிரச்னையில்லை. எவ்வளவு கற்கிறீர்களோ அவ்வளவு வளர்கிறீர்கள்.

Recommended Video

KGF Chapter 2 First Look | Trailer Update | Yash | Sanjay Dutt | Prashanth Neel
குழந்தையை போல

குழந்தையை போல

இந்தி சினிமாவை எப்போதும் நேசிக்கிறேன். ஒரு நடிகராக ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் இருக்கின்றன. நான் ஏன் ஒரே மொழிக்குள் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்? இந்தி இல்லாத மற்ற மொழி படங்களில் நடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அதை ரசித்து நடிக்கிறேன். கே.ஜி.எப் சாப்டர் 2 படப்பிடிப்பில் ஒரு குழந்தையை போல புதிதாக சில விஷயங்களை கற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X