ஒரே வாரத்தில் காஷ்மீரில் சம்பவம் பண்ண சஞ்சய் தத்.. அடுத்து சென்னையில் தான்.. லியோவின் புது அப்டேட்!

சென்னை: லியோ படத்தின் அப்டேட்டே ரசிகர்கள் கேட்கக் கூடாது என்கிற அளவுக்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் அடுத்தடுத்து அப்டேட்களாக கொடுத்து விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார்.

கடந்த வாரம் தான் காபி ஷாப் ஒன்றில் சஞ்சய் தத் லியோ ஷூட்டிங்கில் இணைந்த வீடியோ வெளியானது.

இந்நிலையில், அதற்குள் அவரது காஷ்மீர் போர்ஷன் முடிஞ்சிடுச்சு கிளம்புங்க என தயாரிப்பாளரும் விஜய்யின் அட்மினும் வழியனுப்பி வைத்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

அப்டேட்டுக்கு பஞ்சமே இல்லை

அப்டேட்டுக்கு பஞ்சமே இல்லை

மற்ற நடிகர்களை போல இல்லாமல் தனது ரசிகர்கள் அப்டேட் கேட்டு தவிக்கக் கூடாது என்பதை விஜய் சொல்கிறாரோ இல்லையோ விஜய் பட தயாரிப்பாளர்கள் கருத்துக்களை கச்சிதமாக புரிந்துக் கொண்டு ரசிகர்கள் கேட்காத போதே அப்டேட்டுகளை அவிழ்த்து விட்டு திணறடித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இன்னொரு புதிய அப்டேட்டை லியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லியோ வில்லன்

லியோ வில்லன்

பீஸ்ட் படத்துக்கு எதிராக வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் நடிப்பை பார்த்து வியந்து போன விஜய் அடுத்து நம்ம படத்தில் அவரையே வில்லனாக புக் செஞ்சிடுங்க லோகேஷ் என சிக்னல் கொடுத்தாரோ என்னவோ தெரியவில்லை லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் சஞ்சய் தத்.

ஒரே வாரத்தில் ஓவர்

ஒரே வாரத்தில் ஓவர்

கடந்த வாரம் தான் மும்பையில் இருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து வந்தார் சஞ்சய் தத். விஜய் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோவையும் படக்குழு வெளியிட்டு டிரெண்டாக்கியது. இந்நிலையில், ஒரே வாரத்தில் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலில் தனது போர்ஷனை முடித்து விட்டு கிளம்பி விட்டார் சஞ்சய் தத்.

நடுவே பார்ட்டி வேறு

நடுவே பார்ட்டி வேறு

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் பார்ட்டியிலும் சஞ்சய் தத் கலந்து கொண்ட போட்டோக்களும் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகின. லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து முன்னா பாய் எம்பிபிஎஸ் ஹீரோ வாழ்த்தி இருந்தார். மேலும், நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினருடனும் சஞ்சய் தத் எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

சென்னையில் சம்பவம் இருக்கு

சென்னையில் சம்பவம் இருக்கு

காஷ்மீரில் லியோ ஷூட்டிங்கிற்கு ஒவ்வொரு பிரபல நடிகர்களாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வரவழைத்து அவர்களின் போர்ஷன் முடிந்ததும் அனுப்பி வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், காஷ்மீர் போர்ஷன் முடிந்து விட்டது என்றும் அடுத்து சென்னையில் சந்திப்போம் என சஞ்சய் தத்தை தயாரிப்பாளர் லலித் மற்றும் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் இருவரும் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளனர்.

பர்த்டே பார்ட்டி வீடியோ

பர்த்டே பார்ட்டி வீடியோ

லோகேஷ் கனகராஜின் பர்த்டே பார்ட்டி போட்டோக்கள் ஒரு சில மட்டுமே வந்த நிலையில், ரசிகர்கள் பர்த்டே பார்ட்டி வீடியோவை வெளியிடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர். பார்ட்டியில் விஜய் இருக்கும் போட்டோவே வெளியாகாத நிலையில், வீடியோ வெளியாவது ரொம்ப கஷ்டம் என்றே தெரிகிறது. சீக்கிரமே காஷ்மீர் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X