மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்!

By

மும்பை: மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத் இன்று வீடு திரும்பினார்.

கொரோனா நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 21 லட்சத்து 53 ஆயிரத்து 10 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 43 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதன் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்கு பின் வீட்டுக்குத் திரும்பினர்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

நடிகர் விஷாலும் அவர் தந்தையும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் தேஜாவும் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்திருந்த நடிகர் சஞ்சய் தத், இருந்தும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறியிருந்தார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது.

வீடு திரும்பினார்

வீடு திரும்பினார்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் அவர் வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு கைகளை காட்டியபடி வீட்டுக்குள் அவர் சென்றார். நடிகர் சஞ்சய் தத், தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில் அதீரா என்ற வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் சடக் 2, புஜ்: த பிரைட் ஆப் இந்தியா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X