கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஷூட்டிங்.. புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் சஞ்சய் தத் கலந்து கொள்வாரா?

By

பெங்களூரு: கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில் சஞ்சய் தத் அடுத்த மாதம் கலந்துகொள்வார் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகட்டிவ் என்பது தெரியவந்தது.

திரும்பி விடுவேன்

திரும்பி விடுவேன்

தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். பின் சோசியல் மீடியாவில் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'மருத்துவ சிகிச்சைக்காக, நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு என்ன பிரச்னை என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

உடல்நிலை

உடல்நிலை

அதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ துறையை சேர்ந்த ரசிகை ஒருவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

அதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். சஞ்சய் தத், யஷ் நடிக்கும் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தில் அதீரா என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் மங்களூரில் இப்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட இருக்கிறது.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

இதில் சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் படக்குழு கூறி இருந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் அவர், அடுத்த மாதம் கே.ஜி.எஃப் டீமுடன் இணைவார் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X