கேன்சர் நோயில் இருந்து பூரண குணம் பெற்றேன்.. மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சஞ்சய் தத்!

மும்பை: கேன்சர் நோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தான் பூரண குணம் பெற்று விட்டதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சஞ்சய் தத்தின் தாயார் மற்றும் முதல் மனைவி கேன்சர் நோய் பாதிப்பால் இறந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்துக்கும் கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷி கபூர், இர்ஃபான் கான் இழப்பு

ரிஷி கபூர், இர்ஃபான் கான் இழப்பு

பழம்பெரும் பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் மற்றும் ஹாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் என இந்த ஆண்டு இரு பெரும் திரை நட்சத்திரங்களை கேன்சர் நோய் பலி கொண்டது. தொடர்ந்து, நடிகர் சஞ்சய் தத்துக்கும் புற்றுநோய் பாதிப்பு என தகவல் பரவியதும் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

ஸ்டேஜ் 3 கேன்சர்

ஸ்டேஜ் 3 கேன்சர்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தாயார் மற்றும் முதல் மனைவி கேன்சர் நோய் பாதிப்பால் இறந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வேகமாக பரவின. அதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக சஞ்சய் தத் அறிவித்தார்.

பூரண குணம்

பூரண குணம்

இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சஞ்சய் தத், கடந்த சில வாரங்கள், எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகப்பெரிய போராட்டமாகவும், துயர காலமாகவும் இருந்தது. ஆனால், கடவுளின் கிருபையால் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனையால் இப்போ நான் பூரணமாக குணமாகி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

குழந்தைகள் பிறந்தநாள்

குழந்தைகள் பிறந்தநாள்

தனது ட்வின்ஸ் குழந்தைகளின் 10வது பிறந்தநாளான இன்று அந்த சந்தோஷமான விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் தத்துக்கு சாஹ்ரன் மற்றும் இக்ரா எனும் ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளனர்.

போர் வீரனுக்குத் தான் கடவுள் போர்களை தருவார்

போர் வீரனுக்குத் தான் கடவுள் போர்களை தருவார்

மேலும், வலிமையான போர் வீரனுக்குத் தான் கடவுள் கடினமான போர்களை தருவார் என்றும், தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தன்னை காப்பாற்றியதும் அவர் தான் என்றும் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரசிகர்களின் அன்பு கலந்த பிரார்த்தனைகளுக்கும் நன்றி கூறினார்.

மருத்துவருக்கு நன்றி

மருத்துவருக்கு நன்றி

கோகிலாபென் மருத்துவமனைக்கும் மருத்துவர் செவாந்திக்கும் (Sewanti) அவரது மருத்துவ குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், அவர்கள் துணை இல்லாமல் தான் இவ்வளவு சீக்கிரம் குணமடைந்திருக்க முடியாது என மிகவும் உருக்கமாக நன்றி கூறியுள்ளார் சஞ்சய் தத்.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

சஞ்சய் தத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சடக் 2, நடிகை ஆலியா பட் மற்றும் அந்த படத்தின் இயக்குநர் மகேஷ் பட் மீதுள்ள வெறுப்பு மற்றும் படம் படு மொக்கையாக இருந்த காரணத்தினால், ரசிகர்கள் அந்த படத்தை முற்றிலுமாக புறக்கணித்தனர். சஞ்சய் தத் நடிப்பில் அடுத்து மிரட்டலாக கே.ஜி.எஃப் 2 படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X