காதலரை இழந்து வாடும் மகளை கண்டுகொள்ளாத பிரபல நடிகர்

By Siva

மும்பை: காதலனை இழந்து வாடும் மகளை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கண்டுகொள்ளவில்லை.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மகள் த்ரிஷாலா வெளிநாட்டவர் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த நபர் தனது 33வது வயதில் திடீர் என்று கடந்த 2ம் தேதி மரணம் அடைந்துவிட்டார்.

காதலர் இறந்துவிட்டதை த்ரிஷாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் காதலரின் பெயர் மற்றும் அவரின் மரணத்திற்கான காரணத்தை த்ரிஷாலா தெரிவிக்கவில்லை.

மரணம்

மரணம்

என் இதயம் நொறுங்கிவிட்டது. என்னை காதலித்ததற்கு, பாதுகாத்ததற்கு மற்றும் பாசம் வைத்ததற்கு நன்றி. உன்னால் தான் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். உன்னை சந்தித்ததால் நான் கொடுத்து வைத்தவள் ஆனேன். நீ என்றுமே என் நினைவில் இருப்பாய். உன்னை காதலிக்கிறேன் மற்றும் மிஸ் பண்ணுவேன். நான் என்றுமே உன்னுடையவள் என்று காதலர் பற்றி த்ரிஷாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

காதலர் இறந்துவிட்டதால் வாடும் த்ரிஷாலாவை அவரின் தந்தை சஞ்சய் தத் கண்டுகொள்ளவில்லையாம். த்ரிஷாலா விஷயத்தில் சஞ்சய் எப்பொழுதுமே இப்படித் தான் என்கிறார்கள் அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள். மகளுக்கு ஆறுதல் கூட கூறாமல் மூன்றாவது மனைவி மற்றும் குடும்பம் தான் முக்கியம் என்று இருக்கிறாராம் சஞ்சய் தத்.

தாய்

தாய்

த்ரிஷாலா பிறந்ததில் இருந்தே அவரை சஞ்சய் தத் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை. பிறந்த உடன் தாயை இழந்த த்ரிஷாலா பாசமில்லா உலகில் வாழ வேண்டியது ஆகிவிட்டது. தாயும் இல்லை தந்தையும் பாசம் காட்டுவது இல்லை. சஞ்சய் தத்துக்கு மூன்றாவது மனைவியும், அவருக்கு பிறந்த குழந்தைகளும் மட்டுமே குடும்பம். அவரை பொறுத்த வரை த்ரிஷாலா கடந்த காலம் என்று சஞ்சய் தத்தின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகள்

மகள்

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு சஞ்சு என்கிற பெயரில் படமாக எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியானது. அந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்திருந்தார். படத்தில் த்ரிஷாலா மற்றும் அவரின் தாய் ரிச்சா பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. இருப்பினும் த்ரிஷாலா படத்தை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X