தளபதி 67ல் கமிட்டான சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?... அதிர்ச்சியில் கோலிவுட் நடிகர்கள்!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

சென்னையில் படத்தின் பூஜையை முடித்த படக்குழு, படப்பிடிப்புக்காக காஷ்மீர் பறந்துள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தளபதி 67ல் விஜய்யை அடுத்து சஞ்சய் தத்துக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 படப்பிடிப்பில் தளபதி 67

படப்பிடிப்பில் தளபதி 67

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக இணைந்துள்ள விஜய் - லோகேஷ் கூட்டணி, இந்த முறை கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த மூன்று தினங்களாக தளபதி 67 அப்டேட் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தில் கமிட்டான நடிகர்கள், நடிகைகள் விவரங்களைத் தொடர்ந்து பூஜை வீடியோவும் நேற்று மாலை வெளியானது.

 வில்லனாகும் சஞ்சய் தத்

வில்லனாகும் சஞ்சய் தத்

விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடிக்கின்றனர். இவர்களில் சஞ்சய் தத் மட்டுமே பாலிவுட்டில் இருந்து தளபதி 67ல் கமிட்டாகியுள்ளார். கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து தளபதி 67லும் அவர் தான் மெயின் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தளபதி 67 ஒன்லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன் என கூறியிருந்தார் சஞ்சய் தத்.

 சஞ்சய் தத் சம்பளம்

சஞ்சய் தத் சம்பளம்

தளபதி 67 படம் மூலம் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார் சஞ்சய் தத். இதனிடையே வில்லனாக நடிக்க சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளமாக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67ல் மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதால், இந்தப் படத்திற்கு இந்தியிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறதாம்.

 அதிர்ச்சியில் கோலிவுட் வில்லன்கள்

அதிர்ச்சியில் கோலிவுட் வில்லன்கள்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு தான் அதிக சம்பளம் என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். அவருக்கு அடுத்தபடியாக நடிகர்களில் சஞ்சய் தத் தான் அதிக சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டின் முன்னணி வில்லன் நடிகர்களே அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படக்குழு தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் விரைவில் விஜய் - சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். அதற்காக சஞ்சய் தத்தும் விரைவில் காஷ்மீர் செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X