சிறையில் இருந்ததால் மாற்றம்.. 'பாகுபலி' கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்!

By

சென்னை: பாகுபலி படத்தின் முக்கிய கேரக்டரான கட்டப்பாவில், முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர் என தெரியவந்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், பாகுபலி.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்தது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

இரண்டு படங்களும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வசூல் சாதனை படைத்தது. மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மொத்தம் 1,810 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு கோடி வசூலித்த ஒரே இந்திய படம் இதுதான் என்கிறார்கள்.

உலக அளவில்

உலக அளவில்

இந்தியில் இந்தப் படத்தின் வசூல் சாதனையை வேறு எந்தப் படமும் முறியடிக்கவில்லை என்கிறார் திரைப்பட வியாபார ஆய்வாளர், தரன் ஆதர்ஷ். பிறகு ஜப்பான், சீனா, ரஷ்ய மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கும் வசூலில் சாதனைப் படைத்தது. உலக அளவில் இந்தப் படம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஷ்ய சேனலில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகர்

இந்தப் படத்தின் மூலம் ராணாவும் பிரபாஸூம் இந்திய அளவில் பிரபலமானார்கள். இந்தப் படத்தில் சத்யராஜ் கட்டப்பா கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டர் முக்கியமான ஒன்று. பாகுபலியை, கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பதற்காகவே, இதன் இரண்டாம் பாகம் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளானது. இந்நிலையில் இந்தக் கட்டப்பா கேரக்டரில், முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தைதான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் இயக்குனர் ராஜமவுலி.

விஜயேந்திர பிரசாத்

விஜயேந்திர பிரசாத்

ஆனால், சஞ்சய் தத் அந்த காலகட்டத்தில் சிறையில் இருந்ததால், அவர் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின், சத்யராஜை தேர்வு செய்ததுள்ளார். இதை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி ஸ்கிரிப்ட் டைரட்டருமான விஜயேந்திர பிரசாத், பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கட்டப்பா கேரக்டரில் சஞ்சய்தத் நடித்திருந்தால் இந்தளவுக்கு பெயர் பெற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான் என்றும் அந்த கேரக்டரில் சத்யராஜ் சிறப்பாக நடித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X