Leo: லோகேஷ் கனகராஜ் என் புள்ள மாதிரி.. லியோ பட வில்லன் சஞ்சய் தத் சொன்ன சூப்பரான விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படம் இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையப் போகிறது. இந்நிலையில், சமீபத்தில் லியோ படம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் குறித்தும் லியோ படம் குறித்தும் பேசியுள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் படங்களை இயக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தை விட லியோ படம் டபுள் மடங்கு ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளனர்.

Sanjay Dutt praises Lokesh Kanagaraj and told he is like my son in a recent interaction

50 கோடி சம்பளம்: நடிகர் விஜய் தனது அடுத்த படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு காரணமான லியோ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இண்டஸ்ட்ரி ஹிட் ஆக்கி 400 கோடிக்கும் மேல் அதிகமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவிக்க வைத்த லோகேஷுக்கு லியோவில் இப்படியொரு சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லியோவின் ப்ரீ பிசினஸே 400 கோடி வரை சென்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

கேஜிஎஃப் வில்லன்: யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத் பெயர் தான் இந்த படத்தில் தாஸ் என்றும் சஞ்சய் தத் விஜய்யின் அப்பா என்றும் இன்னொரு தகவல்களும் தீயாக பரவி வருகின்றன.

நடிகர் அர்ஜுன் தான் மெயின் வில்லன் என்றும் சஞ்சய் தத் கதாபாத்திரம் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Sanjay Dutt praises Lokesh Kanagaraj and told he is like my son in a recent interaction

என் புள்ள மாதிரி: லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலிலேயே கலந்து கொண்ட சஞ்சய் தத்தை நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் வரவேற்ற காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. முன்னா பாய் எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஹீரோவாக நடித்த சஞ்சய் தத் சமீப காலமாக பான் இந்தியா படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது மகன் மாதிரி என்றும் அவரது இயக்கம் தன்னை மிகவும் வியக்க வைத்துள்ளது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சஞ்சய் தத் கூறியுள்ளார்.

நா ரெடி பாடலிலும்: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சரக்கு, தம், கறி சோறு என பார்ட்டி மோடில் இருந்த "நா ரெடி" பாடலிலும் நடிகர் சஞ்சய் தத் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சஞ்சய் தத், விஜய் எல்லாம் ஒரே கேங் தான் என்றும் இந்தக் கூட்டத்தில் நடக்கும் ஒரு பிரச்சனை காரணமாக இங்கிருந்து ஒதுங்கி நடிகர் விஜய் அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கையுடன் காஷ்மீரில் வசித்து வரும் நிலையில், மீண்டும் அவரை விரட்டி வரும் டான்களை லியோ துவம்சம் செய்வது தான் கதை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X