நியூயார்க் செல்கிறார் சஞ்சய் தத்.. அம்மா சிகிச்சைப் பெற்ற அதே மருத்துவமனையில் இவருக்கும் சிகிச்சை

By

மும்பை: நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நடிகர் சஞ்சய் தத் விரைவில் நியூயார்க் செல்ல இருக்கிறார்.

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கான

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிப்புக்கு இடைவெளி

நடிப்புக்கு இடைவெளி

அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இதுபற்றி ட்விட்டரில தெரிவித்திருந்த நடிகர் சஞ்சய் தத், பிறகு இரு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினார் இந்நிலையில் ட்விட்டரில் 'மருத்துவ சிகிச்சைக்காக நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறேன் கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன் என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

அவர் தனக்கு என்ன பிரச்னை என்பதை தெரிவிக்கவில்லை. அவருக்கு 3-ம் கட்ட நுரையீரல்

புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல்

வெளியானது. பின்னர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அவர் மனைவி மான்யதா

தத் உறுதி செய்தார். இதை அறிந்த பாலிவுட் அதிர்ச்சி அடைந்தது.

Recommended Video

நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
குண்டுவெடிப்பு வழக்கு

குண்டுவெடிப்பு வழக்கு

சினிமா பிரபலங்கள் அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில்

தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதை அடுத்து

விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்

என்பதால் ஆரம்பத்தில் அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

தாய் நர்கிஸ் தத்

தாய் நர்கிஸ் தத்

சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் 5 வருட விசா அவருக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சஞ்சய் தத், அவர் மனைவி மான்யதா, சகோதரி பிரியா தத் ஆகியோர் நியூயார்க் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. சஞ்சய் தத்தின் தாயும் பிரபல
நடிகையுமான நர்கிஸ் தத், புற்றுநோய் காரணமாக, நியூயார்க்கில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் (Memorial Sloan Kettering Cancer Center) சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.

சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

அதே மருத்துவமனையில்தான் நடிகர் சஞ்சய் தத்தும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட உள்ளார்

என்று கூறப்படுகிறது. இங்குதான் நடிகை மணிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே கடந்த

சில மாதங்களுக்கு முன் மறைந்த நடிகர் ரிஷி கபூர் ஆகியோரும் சிகிச்சை பெற்று

இருந்தனர். பழமையான புற்றுநோய் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X