Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அம்மாவையும் மனைவியையும் வாரிச் சென்ற கேன்சர்.. இப்போ சஞ்சய் தத்தையும் விடல.. துயரத்தில் ரசிகர்கள்!
மும்பை: பாலிவுட் நடிகர்களை விடாமல் துரத்தி வருகிறது இந்த கேன்சர் நோய்.
ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேன்சர் நோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனா இல்லை
மூச்சுத் திணறல் காரணமாக சமீபத்தில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சஞ்சய் தத்துக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று அவருக்கு ஏற்படவில்லை என்பது சோதனையின் முடிவில் தெரியவந்தது.
சின்ன பிரேக்
ஆனால், சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட உண்மையான பிரச்சனை குறித்து, அவர் தெரிவிக்காமல், சிகிச்சைக் காரணமாக சில நாட்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பிகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் பயப்படவோ வதந்திகளை பரப்பவோ வேண்டாம். சீக்கிரம் குணமடைந்து உங்கள் முன் வந்து நிற்பேன் என ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
நுரையீரல் புற்றுநோய்
சஞ்சய் தத் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, அவரது உடல் நிலை சீராக வேண்டும் என பலரும் இணையத்தில் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்துள்ளார்.
அம்மாவுக்கும் மனைவிக்கும்
நடிகர் சஞ்சய் தத்தின் அம்மா நர்கீஸ் மற்றும் முதல் மனைவி ரிச்சா சர்மா ஆகிய இருவருக்கும் இது போன்று கேன்சர் பாதிப்பு ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1981ம் ஆண்டு மே 3ம் தேதி சஞ்சய் தத்தின் அம்மா உயிரிழந்தார். ராக்கி படத்தின் மூலம் சஞ்சய் தத் ஹீரோவான நான்கே நாட்களில் நிகழ்ந்த தாயின் மரணம் அவரை மிகவும் வாட்டியது.
மனைவியையும் கொண்டு சென்ற கேன்சர்
32 வயதே ஆன நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் முதல் மனைவி ரிச்சா சர்மா கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கேன்சர் நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவியான மானாயட்டாவின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் சஞ்சய் தத் கவலை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் 61வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் வில்லன் அதீராவாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் மிரட்டல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் விரைவில் ரிலீசாகவுள்ள சதாக் 2 படத்திலும் நடிகர் சஞ்சய் தத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.